கொழும்பை அண்டிய பகுதிகளான நவகமுவ, கல்கிஸ்ஸை, வெலிகட மற்றும் தெஹிவளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைகளின் காரணமாககாவல் துறை மற்றும் பாதுகாப்பு படையினர் நடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதற்கமைய கொழும்பை அண்டிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காவல் துறையால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே குறித்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.
நாட்டின் குடிவரவு குடியகல்வு சட்டத்திற்கு புறம்பாக வீசாவின்றி தங்கியிருந்த பெண்ணொருவர் உட்பட 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸை காவல் துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இந்திய பிரஜை உட்பட 6 நைஜீரிய பிரஜைகளும், நவகமுவ பகுதியில் ஈராக் நாட்டு பிரஜை ஒருவரும், வெலிகட பிரதேசத்தில் மேலும் நைஜீரிய பிரஜைகள் நால்வரும் தெஹிவளை பிரதேசத்தில் தாய்லாந்து பெண்ணொருவரும் உள்ளடங்களாக 13 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 20 – 56 வயதுகளுக்கிடைப்பட்டவர்கள் என்பதுடன் மேலதிக விசாரணைகளையும் காவல் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal