தீவிரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்புக்கு பொறுப்பான தலைவரான மொஹமட் பவாஸ் விசேட காவல் துறை குழுவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
38 வயதுடைய மொஹமட் பவாஸ் வாழைத்தோட்ட தொடர்மாடி குடியிருப்பிலுள்ள வீடொன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை கைதுசெய்யும் போது, அவரிடம் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் சுவரொட்டிகள், அமைப்பின் போதனைகள் அடங்கிய பென்ட்ரைவ், போதனைகளுடனான காணொளிகள் அடங்கிய அலைபேசிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Eelamurasu Australia Online News Portal