எவன்கார்ட் நிறுவனத்துக்கு மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை முன்னெடுத்து சென்று அரசாங்கத்துக்கு 1140 கோடி ரூபா நட்டதை ஏற்படுத்திய விவகாரம் தொடர்பில் முன்னாள் கடற்படை அதிகாரி விஸ்வாஜித் நந்தனா தியபலனகே சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று அதிகாலை 1.00 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More »செய்திமுரசு
ரணிலின் நிபந்தனையும் தமிழ் மக்களின் நிலைப்பாடும்!
ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையிலும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதி முடிவு எடுக்க முடியாத நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடு தொடர்ந்து வருகின்றது. கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டுமென்று ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகியனவும் சஜித் பிரேமதாஸவை ...
Read More »பிரிட்டிஸ் பிரதமருக்கு அமெரிக்க பெண்மணியுடன் என்ன தொடர்பு?
பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ்ஜோன்சனிற்கும் அமெரிக்க பெண் வர்த்தகர் ஒருவரிற்கும் இடையிலான உறவு குறித்து சர்ச்சையொன்று மூண்டுள்ளது. பொறிஸ்ஜோன்சன் லண்டன் மேயராக பதவி வகித்த காலத்தில் அமெரிக்க பெண் வர்த்தகரான ஜெனீபர் அர்குறி என்பவரிற்கு அரசநிதியிலிருந்து பெருமளவு பணத்தை வழங்கினார் என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பொறிஸ்ஜோன்சன் மேயராக பதவி வகித்தவேளை அவரது கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட வெளிநாட்டு வர்த்தக தூதுக்குழுக்களை அமெரிக்க பெண் வர்த்தகரின் நிறுவனம் பயன்படுத்தியது என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வர்த்தக குழுக்களை பயன்படுத்துவதற்கு அமெரிக்க பெண் வர்த்தகரிற்கு ...
Read More »பௌத்த அடாவடித்தனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது!
முல்லைத்தீவு, நீராவியடி, பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் பூதவுடலை தகனம் செய்த சம்பவமானது தமிழ் மக்களைக் குறிப்பாக இந்து மத சகோதரர்களை மிகமோசமாக அவமானப்படுத்தும் செயலாக அமைந்துள்ளமை எம்மையெல்லாம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க நீதி சமாதான ஆணைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.வி.பி.மங்களராஜா அடிகளார் நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னர் ஒரு தடவை நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக சிறைத்தண்டனை பெற்று தண்டனைக்காலம் முடியமுன் ஜனாதிபதியின் விசேட மன்னிப்பில் வெளியேறிய ஞானசார ...
Read More »உயிரிழந்தவர்கள், வெளிநாடு சென்றவர்களின் விபரங்கள் தேர்தல் ஆணையகத்தால் சேகரிப்பு!
2018 ஆம் ஆண்டு தேர்தல் வாக்களார் இடாப்பில் பதிவுசெய்யப்பட்ட பின்னர் வெளிநாடு சென்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த தகல்வகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 க்கும் திகதிக்குப் பின்னர் உயிரிழந்தவர்கள் மற்றும் வெளிநாடு சென்றவர்கள் தொடர்பான விபரங்களை ஒவ்வொரு கிராம சேவையாளர்களும் சேமித்து அது குறித்த தகவல்களை மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு அறிவிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் மேற்படி தகவல்களை சமர்ப்பிக்க ...
Read More »சக்திவாய்ந்த வெடிகுண்டுகளுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள்!
சிட்னி விமான நிலையத்திற்குள் பயங்கரவாத சகோதரர்கள் அமைதியான முறையில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தவிருந்த காணொளி காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மஹ்மூத் (31) மற்றும் கலீத் கயாத் (51) சகோதரர்கள் கடந்த 2017ம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் பரபரப்பான விமான நிலையத்திற்கு வெளியே தங்களுடைய சாமான்களுடன் சேர்த்து வெடிகுண்டுகளை சுமந்து சென்றுள்ளனர். காவல் துறை வெளியிட்டுள்ள அந்த காணொளி காட்சியில், சோதனை செய்யும் இடத்தை நெருங்கிய போது, எடை அதிகம் இருப்பதாக மஹ்மூத் கூறியுள்ளார். உடனே இருவரும் மிகப்பெரிய ...
Read More »‘எமக்குத் தேவை புதிய ஜனாதிபதி அல்ல’
யாழ்ப்பாணம் விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்குபடுத்தலில், திருநெல்வேலியில் அமைந்துள்ள வளாகத்தில், விவசாயக் கண்காட்சி கடந்த வாரம் நடைபெற்றது. இயற்கையோடு இணைந்து, இயற்கையையும் குழப்பாது, நாமும் குழம்பாது விவசாயச் செய்கை செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. மூன்று நாள்கள் எனத் திட்டமிடப்பட்டிருந்த கண்காட்சி, பார்வையாளர்களின் அதிகரித்த வருகையால், கால நீடிப்பும் செய்யப்பட்டது. கண்காட்சி பார்த்த களைப்பில், ‘அம்மாச்சி’யில் ஏதேனும் குடிப்போம் எனச்சென்றோம். அங்கு சென்றால், அங்கும் அரசியல் அலசல்களே நடைபெற்றுக் கொண்டிருந்தன. கண்காட்சியைப் பார்வையிட வந்த பாடசாலையொன்றின் ஆசிரியர் குழாம், கலகலப்பாக உரையாடிக் கொண்டிருந்தது. “நீங்கள் யாருக்குச் ...
Read More »சஜித்தை வேட்பாளராக்க ரணிலின் நிபந்தனை!
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் உயர்மட்ட உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நேற்று (24) இரவு இடம்பெற்றது. இதன்போதே பிரதமர் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல, கபீர் ஹசிம், ரவி கருணாநாயக்க, நவீன் திசாநாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார, மலிக் ...
Read More »மோடியை குறி வைக்கும் பயங்கரவாதிகள்!
காஷ்மீர் பிரச்சினைக்கு பழி தீர்க்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல பயங்கரவாதிகளின் சதி திட்டம் தீட்டியிருப்பதாக வெளிநாட்டு உளவு அமைப்பு கண்டுபிடித்ததுள்ளது. காஷ்மீர் பிரச்சினையை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்காக மத்திய அரசு பல்வேறு துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காஷ்மீர் மாநிலத்துக்கு 370-வது சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. காஷ்மீரில் வன்முறைகள் தொடரக்கூடாது என்பதற்காக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்களை கைது ...
Read More »யாழ். சட்டத்தரணிகள் வெள்ளிவரை சேவைப் புறக்கணிப்புக்கு ஆதரவு!
வடக்கு மாகாண சட்டத்தரணிகளின் சேவைப் புறக்கணிப்பு வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தொடரும் என்ற நிலைப்பாட்டை ஏற்று ஆதரவளிப்பது என யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கமும் தீர்மானம் எடுத்தது. யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் தலைவி ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் தலைமையில் இன்று முற்பகல் யாழ்ப்பாணம் நீதிமன்ற சட்ட நூலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை அவமதித்து செயற்பட்டமை மற்றும் கருத்து வெளியிட்டமை தொடர்பில் ஞானசார தேரர் அவர் சார்ந்த தரப்புகளுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் ...
Read More »