பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ்ஜோன்சனிற்கும் அமெரிக்க பெண் வர்த்தகர் ஒருவரிற்கும் இடையிலான உறவு குறித்து சர்ச்சையொன்று மூண்டுள்ளது.
பொறிஸ்ஜோன்சன் லண்டன் மேயராக பதவி வகித்த காலத்தில் அமெரிக்க பெண் வர்த்தகரான ஜெனீபர் அர்குறி என்பவரிற்கு அரசநிதியிலிருந்து பெருமளவு பணத்தை வழங்கினார் என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பொறிஸ்ஜோன்சன் மேயராக பதவி வகித்தவேளை அவரது கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட வெளிநாட்டு வர்த்தக தூதுக்குழுக்களை அமெரிக்க பெண் வர்த்தகரின் நிறுவனம் பயன்படுத்தியது என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வர்த்தக குழுக்களை பயன்படுத்துவதற்கு அமெரிக்க பெண் வர்த்தகரிற்கு பொறிஸ்ஜோன்சன் விசேட சலுகைகளை வழங்கினார் என சண்டே டைம்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பெண் வர்த்தகரிற்கு பொறிஸ்ஜோன்சனின் வர்த்தக கூட்டங்களில் கலந்துகொள்வதற்கான தகுதி இல்லாதபோதிலும் அவர் அதில் கலந்துகொண்டார் எனசண்டே டைம்ஸ் தெரிவித்தள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் வெளியானது தொடர்ந்து பிரிட்டிஸ் பிரதமர் அமெரிக்க பெண் வர்த்தகருடனான தனது தொடர்பாடல்கள் குறித்த விபரங்களை அடுத்த 14 நாட்களிற்குள் வெளியிடவேண்டும் என பாரிய லண்டன் அதிகார சபையின் மேற்பார்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த விவகாரம் பிரித்தானிய நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்ற அமர்வுகளை பொறிஸ்ஜோன்சன் இடைநிறுத்தியமை சட்டவிரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் அவர் நெருக்கடியை சந்தித்துள்ள தருணத்திலேயே இந்த சர்ச்சை வெடித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal