தனிமனித ஒழுக்கம், நேர்மை, லஞ்சத்துக்கும் சலுகைகளுக்கும் விலைபோகாத தைரியம், தமிழ் மக்களின் அடிப்படை நிலைப்பாடுகளை தெளிவாக வலியுறுத்துவதோடு அதை முன்னின்று செய்யும் தற்றுணிவு கொண்ட, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை அடைவதற்காக கொள்கைப்பற்றுடன் செயற்படக் கூடிய அரசியல் பிரதிநிதிகளையே இம்முறை தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ்மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளும் பயணத்தில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பல ...
Read More »செய்திமுரசு
தப்புக் கணக்கு
ஐந்தும் ஐந்தும் எத்தனை என்றால், பத்து (10) தான் பதில், ஆனால், ஐம்பத்தைந்து (55) என்கிறார் பிரதமர் மகிந்த ராஜபக்ச. நாட்டில் உள்ள தேசியவாத முகாமை முற்றிலுமாக அழித்து, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம், இலங்கையின் பிளவுக்கு வழி செய்யும் நோக்கத்துடனேயே வெளிநாட்டு சக்திகள் இலங்கையில் தலையீடு செய்தன என்று, பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியிருக்கும் கருத்து, ஐந்தும் ஐந்தும் 55 என்று பதில் கூறுவதற்குச் சமமானது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், இலங்கை வெற்றி பெறும் என்று சர்வதேச சக்திகள் எதிர்பார்க்கவில்லை என்றும், ...
Read More »புலம்பெயர் தமிழ் மக்களை நோக்கி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்…….
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய புலம்பெயர் தமிழ் மக்களே! எதிர்வரும் ஆகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கள நிரவரங்களைத் தெளிவுபடுத்தி, எமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க விரும்புகின்றோம். கடந்த ஏழு தசாப்பதங்களாக இலங்கைத்தீவில் இன அழிப்புக்கு முகம்கொடுத்துவரும் எமது மக்கள் அந்த அழிவிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தொடர்ச்சியாகப் போராடிவருகின்றார்கள். குறிப்பாக கடந்த 2009 வரையான மூன்று தசாப்பதங்களாக அதி உச்ச அர்ப்பணிப்புக்களையும் தியாகங்களையும் செய்துள்ளதன் மூலம் எமது உரிமைப் போராட்டம் சர்வதேச கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளது. இந்நிலையில் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளானது, தமிழ்த் ...
Read More »தேவாலயங்களிற்கு வெடிகுண்டு மிரட்டல் இல்லை
வவுனியாவில் அமைந்துள்ள தேவாயலங்களிற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் எதுவும் விடுவிக்கப்படவில்லை என்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வவுனியா தலைமை காவல் துறை நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். வவுனியா றம்பைக்குளத்தில் அமைந்துள்ள அந்தோனியார் ஆலயம் மற்றும் முக்கிய தேவாலயங்களில் இன்றையதினம் இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டு வருவதுடன், நகரின் முக்கிய பகுதிகள், மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களிலும் காவல் துறை மற்றும் இராணுவத்தினர் மோப்பநாய்கள் சகிதம் விசேட தேடுதல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர். மன்னார் பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றிற்கு ...
Read More »ஆஸ்திரேலியாவில் உணவிற்கான உதவிகளை நம்பி 14 லட்சம் மக்கள்
கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள மந்தநிலையினால், உணவிற்கான உதவிகளை நம்பியிருக்கும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்துள்ளது. இன்றைய சூழலில், ஆஸ்திரேலியாவில் 14 லட்சம் மக்கள் உணவிற்கான உதவிகளைப் பெறுகின்றனர். இதுவே பெருந்தொற்று சூழலுக்கு முன்னதாக சுமார் 8 லட்சம் மக்களே இந்த உதவிகளைப் பெற்றுள்ளனர். பெருந்தொற்று சூழலினால், உணவு உதவிகள் தேவைப்படுவோரின் எண்ணிக்கை 78 சதவீதம் அதிகரித்துள்ளது என கொரோனாவுக்கான ஆஸ்திரேலிய செனட் குழுவிடம் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய உணவு வங்கியின் தலைமை நிர்வாகி Brianna Casey. வெளிநாட்டு மாணவர்கள், தற்காலிக விசா கொண்டிருப்பவர்கள், ...
Read More »புலம்பெயர்வதில் குடிவரவு சிக்கல்களை சமாளிப்பது என்பது காத்திருத்தல், அச்சம், மன நலன் பாதிப்பு
ஆஸ்திரேலிய குடியுரிமைக் கொண்ட சதிந்தரும் இந்தியாவில் உள்ள அவரது கணவரான சுமித்தும் மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது Partner விசாவுக்கான விண்ணப்பம் ஆஸ்திரேலியாவில் நிராகரிக்கப்பட்டு இருப்பதால், இப்படி ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இவர்களது குடிவரவு வழக்கறிஞராக செயல்படுபவர் யுன் சென். சதிந்தர்- சுமித்திற்கு திருமணமான போதிலும், இவர்கள் பேஸ்டைம், இன்னும் சமூக ஊடகங்கள் வழியாக உரையாடிக் கொண்டதற்கான ஆதாரங்கள் உள்ள போதிலும், இவர்களுக்கு இடையிலான உறவு உண்மையானதல்ல என அவர்களது Partner விசா ஆஸ்திரேலிய குடிவரவுத்துறையால் ...
Read More »உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்று லண்டனில் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்ட பெண்
லண்டனின் தேவாலயத்தில் இலங்கையின் உயிர்த்த ஞாயிறு பாணியில் தாக்குதலொன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக பிரிட்டனின் முதல் பெண்தற்கொலை குண்டுதாரி என கருதப்படுபவர் காவல் துறையினர் விசாரணையில் தெரிவித்துள்ளார். சாபியா சைக் என்ற 36 வயது பெண் பிரிட்டனின் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களிடம் அவர்கள் யார் என தெரியாத நிலையில் இதனை தெரிவித்துள்ளார். சிறிய வரலாறு ஒன்றை உருவாக்க விரும்புகின்றேன் தலைநகரில் ஒரு பயங்கரமான நாளில் என்னால் முடிந்த எத்தனை பேரை கொலை செய்யமுடியுமோ அத்தனை பேரை கொலை செய்ய விரும்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். போதைப்பொருளிற்கு ...
Read More »தேர்ந்த கலை – இலக்கிய வாசகர் இராஜநாயகம் இராஜேந்திராவை இழந்தோம்
மெல்பனில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக என்னுடனும் மற்றும் அனைவருடனும் சிரித்த முகத்துடனும் பண்பான இயல்புகளுடனும் உறவாடிய அன்பர் இராஜநாயகம் இராஜேந்திரா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். அவரை, இறுதியாக கடந்த ஆண்டில் இங்கு நடைபெற்ற நடன ஆசிரியை திருமதி அகிலா விக்னேஸ்வரனின் நடனப்பள்ளியின் ( Narthana Sorubalaya Classical Dance – NSCD ) மாணவர்களின் வருடாந்த நடன ஆற்றுகையின்போது சந்தித்து உரையாடியதுதான் உடனடியாக நினைவுக்கு வந்தது. எங்கே காண நேர்ந்தாலும், எனது எழுத்துக்கள் பற்றிய தனது வாசிப்பு அனுபவத்தை ...
Read More »தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை 21 நாட்களுக்கு நீடிக்கவேண்டும்
தனிமைப்படுத்தல் நடவடிக்கையை 21 நாட்களுக்கு அதிகரிப்பதற்கான யோசனையை தேர்தல் ஆணைக்குழு முன்வைக்கவுள்ளது. தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்களிற்கான தனிமைப்படுத்தல் காலத்தினை 21 நாட்களுக்கு அதிகரிக்கவேண்டும் என்ற யோசனையை தேர்தல் ஆணைக்குழு சுகாதார அதிகாரிகளிடம் ஆறாம் திகதி முன்வைக்கவுள்ளது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலிற்கு முன்னர் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக இந்த யோசனையை முன்வைக்கவுள்ளதாக மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதேவேளை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை தேர்தல் வாக்களிப்பு நேரம் முடிவடைவதற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னர் வாக்களிப்பு நிலையங்களிற்கு கொண்டுவரமுடியுமா என்பது குறித்து ...
Read More »சம்பந்தனை நான் முன்பே கண்டுகொள்ளவில்லை……
சம்பந்தன் என்னுடைய நண்பர். அவர்தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தார். ஆனால் அவருடைய பார்வை வித்தியாசமாக இருந்தது. அதனை நான் முன்பே கண்டுகொள்ளவில்லை. பின்னர்தான் கண்டுகொண்டேன் என்று முன்னாள் வடமாகண முலமைச்சரும் ஓய்வு பெற்ற நீதியரசரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். முன்னாள் வடமாகண முலமைச்சரும் ஓய்வு பெற்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் மட்டக்களப்பு கொம்மாதுறையில் ...
Read More »