பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இருவர் தாங்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் தனித்தனியே மனு அளித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் பரிபா அதெல்காஹ், ரோலண்ட் மார்சல். இருவரும் ஆராய்ச்சியாளர்கள். 60 வயது கடந்த இவர்கள் 38 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், பரிபா ஈரானுக்கு ஆராய்ச்சி நடத்த சென்றார். ஆனால் அவர் உளவு வேலை பார்த்ததாக கைது செய்யப்பட்டு, அங்குள்ள எவின் சிறையில் அடைக்கப்பட்டார்.அதைத் தொடர்ந்து அவரை பார்ப்பதற்காக ஈரான் ...
Read More »செய்திமுரசு
காத்திருக்கிறது ஆஸ்திரேலிய விமானம்!
கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் வுஹான் நகரில் உள்ள ஆஸ்திரேலியர்கள் அழைத்து செல்ல சீனாவிடம் அனுமதிக்கோரி காத்திருக்கிறது ஆஸ்திரேலிய விமானம். இதில் கொண்டு வரப்படக்கூடிய ஆஸ்திரேலியர்கள், வட ஆஸ்திரேலிய பிரதேசமான டார்வினுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். அங்கு பயன்படுத்தப்படாத கிராமப்புறத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சீனாவிலிருந்து வெளியேறிய ஆஸ்திரேலியர்களுக்கு வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்காணிக்க இருக்கின்றனர். இதனை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் உறுதி செய்திருக்கிறார். இந்த சூழலில், கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் வுஹான் நகரை விட்டு வெளியேற ஆஸ்திரேலிய அரசு ...
Read More »காணாமல்போனோர் பிரச்சினையைக் கையாளுதல்: அரசின் நிலைப்பாட்டில் மறுபரிசீலனை அவசியம்!
ஒரு அரசாங்கம் தன்மீது தானாகக் குற்றம் சுமத்தும் என்று எதிர்பார்ப்பது சாத்தியமில்லை. போரின் முடிவிற்குப் பின்னரான காலப்பகுதியில் அரசாங்கத்திற்கும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் ஒரு பாலமாக செயற்படுவதற்கு முயற்சித்த முன்னாள் இராஜதந்திரி ஒருவர் முன்னர் ஒருதடவை இவ்வாறு கூறினார். போரின் போது காணாமல்போனோராக அறிவிக்கப்பட்டவர்கள் உண்மையில் இறந்துவிட்டார்கள் என்றும், அவர்களுக்கு நேர்ந்த கதிக்கு அரசாங்கம் பொறுப்பல்ல என்றும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அண்மையில் வெளியிட்ட கருத்து இதுவிடயத்தில் மறுப்பைத் தெரிவித்து வருகின்ற ஒரு நீண்டகாலக் கொள்கையின் தொடர்ச்சியேயாகும். அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் விளைவாகக் காணாமல்போனோர் ...
Read More »மெல்போர்ன் ஸ்டார்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது சிட்னி சிக்சர்ஸ்!
சிட்னியில் நடந்த பிக் பாஷ் டி 20 லீக் போட்டியின் இறுதிப் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சிட்னி சிக்சர்ஸ் அணி. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பிக் பாஷ் டி 20 லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 12 ஓவராக குறைக்கப்பட்டது. அதன்படி, சிட்னி சிக்சர்ஸ் ...
Read More »வெலிகட மெகஸின் சிறைச்சாலை அதிகாரியொருவருக்கு தொலைபேசி மிரட்டல்!
வெலிகட மெகஸின் சிறைச்சாலையின் அதிகாரியொருவருக்கு தொலைபேசி மிரட்டலொன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் ஆலோசனைக்கு ஏற்ப குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்த்திருத்தங்கள் இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்சன தெரிவித்துள்ளார்.
Read More »சீனாவில் 24 மணி நேரத்தில் 81 பேர் மரணம்!
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 81 பேர் பலியாகி உள்ளனர். சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உள்ளது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் ...
Read More »கூட்டணியில் செயலாளர் நாயகமாக யாரை நியமிப்பது?
சஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள அரசியல் கூட்டணியில் செயலாளர் நாயகமாக யாரை நியமிப்பது என்ற சர்ச்சைக்கு தீர்வு காணும் வகையில் நாளை மறுநாள் (10) திங்கட்கிழமை கூடும் செயற்குழுவில் வாக்கெடுப்பை நடத்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். புதிய அரசியல் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க சஜித் பிரேமதாச முன்னதாக தீர்மானித்த நிலையில் அதற்கு செயற்குழு அனுமதியும் கிடைத்திருந்தது. இந்நிலையில் ரவி கருணாநாயக்க அல்லது நவீன் திஸாநாயக்கவை இந்த பதவியில் அமர்த்துமாறு ரணில் தரப்பு யோசனை தெரிவித்துள்ளது. ...
Read More »உயிரிழக்கும் நிலையில் உள்ள மகனை பார்ப்பதற்கு சீன தாய்க்கு அவுஸ்திரேலியா அனுமதி!
மெல்பேர்ன் மருத்துவமனையில் உயிரிழக்கும் தறுவாயில் உள்ள மகனை பார்ப்பதற்கு சீனாவை சேர்ந்த தாய்க்குஅவுஸ்திரேலிய அரசாங்கம் கொரானாவைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்தி அனுமதி வழங்கியுள்ளது. ஜனவரியில் விக்டோரியாவில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய் மெல்பேர்ன் மருத்துவமனையில் உயிரிற்காக பேராhடிக்கொண்டிருக்கின்ற லி சாங்சியாங் என்ற 22 இளைஞனை பார்ப்பதற்கே இளைஞனின் தாய்க்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அனுமதிவழங்கியுள்ளது. ளைஞனின் தாய் மகனை பார்ப்பதற்காக விண்ணப்பித்த தருணத்திலேயே சீனா பிரஜைகள் அவுஸ்திரேலியாவிற்கு வருவதற்கு ஸ்கொட் மொறிசன் அரசாங்கம் தடை விதித்தது. இந்நிலையில் தடையிலிருந்து இளைஞனின் தாய்க்கு விதிவிலக்கு அளித்துள்ள அரசாங்கம் மகனை பார்ப்பதற்காக ...
Read More »ஒரு வதைமுகாமின் கதை!
உலக வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட ஒரு முக்கியமான இடமான ஆஸ்விட்ச் மீண்டும் பேசப்படலாகியிருக்கிறது. இந்த ஆண்டு முழுமையுமே அது பேசப்படும். மனித குலம் மறக்கவே முடியாத இடங்களில் ஒன்றான அது எப்படி பேசப்படாமல் இருக்க முடியும்? நாஜிக்களின் ஆஸ்விட்ச் வதைமுகாமிலிருந்து யூதர்கள் விடுவிக்கப்பட்டதன் 75-வது ஆண்டு தற்போது அனுசரிக்கப்படுகிறது. ஆஸ்விட்ச் ராணுவ வதைமுகாம் என்பது வெறும் முகாம் மட்டுமல்ல; நவீனக் கொலைக்களம். ஈவிரக்கமற்றவர்களிடம் அதிகாரமும் படைபலமும் சேர்ந்தால் என்ன ஆகும் என்பதற்கு உலக சாட்சியாக இருப்பது ஆஸ்விட்ச். ஜெர்மானிய நாஜி அரசு, இரண்டாம் உலகப் போரின்போது ...
Read More »முல்லை யேசுதாசன் பற்றி ஓவியர் புகழேந்தி!
முல்லை யேசுதாசன் அவர்கள் எழுத்தாளர், திரைக்கலைஞர், ஒளிப்படக் கலைஞர் என பன்முக ஆற்றலாளர்.. என் முதல் தமிழீழப் பயணத்தில் -2004 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் நடைபெற்ற அவருடைய “நீலமாகி வரும் கடல்” நூல் வெளியீட்டு நிகழ்வில் அண்ணன் புதுவை இரத்தினதுரை, என் இனியத் தோழர் புலிகளின் குரல் தமிழன்பன் ஆகியோரோடு கலந்து கொண்டேன்.. தமிழீழத்தில் நான் கலந்துகொண்ட முதல் பொது நிகழ்வு அது. பல்வேறு வகைகளில் மறக்க முடியாத நிகழ்வும் கூட.. அதன் பிறகான பல பயணங்களில் நிதர்சனம், தமிழீழத் தேசியத் தொலைகாட்சி, சேரலாதனின் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal