மெல்பேர்ன் மருத்துவமனையில் உயிரிழக்கும் தறுவாயில் உள்ள மகனை பார்ப்பதற்கு சீனாவை சேர்ந்த தாய்க்குஅவுஸ்திரேலிய அரசாங்கம் கொரானாவைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்தி அனுமதி வழங்கியுள்ளது.
ஜனவரியில் விக்டோரியாவில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய் மெல்பேர்ன் மருத்துவமனையில் உயிரிற்காக பேராhடிக்கொண்டிருக்கின்ற லி சாங்சியாங் என்ற 22 இளைஞனை பார்ப்பதற்கே இளைஞனின் தாய்க்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அனுமதிவழங்கியுள்ளது.
ளைஞனின் தாய் மகனை பார்ப்பதற்காக விண்ணப்பித்த தருணத்திலேயே சீனா பிரஜைகள் அவுஸ்திரேலியாவிற்கு வருவதற்கு ஸ்கொட் மொறிசன் அரசாங்கம் தடை விதித்தது.
இந்நிலையில் தடையிலிருந்து இளைஞனின் தாய்க்கு விதிவிலக்கு அளித்துள்ள அரசாங்கம் மகனை பார்ப்பதற்காக அவுஸ்திரேலியாவிற்கு வருவதற்காக அனுமதியை தாய்க்கு வழங்கியுள்ளது.
பதில் குடிவரவுதுறை அமைச்சர் வேர்ஜினரியா டிரையோலி அந்த குடும்பத்திற்காக தனது மனம் வேதனைப்பட்டது இரங்கியது என குறிப்பிட்டுள்ளார்.
மிகுந்த இரக்கத்தையும் கருணையையும் காண்பிக்கவேண்டிய இவ்வாறான சந்தர்ப்பங்களில் இது குறித்து முடிவெடுப்பதற்கான அதிகாரத்தை அமைச்சரவை எனக்கு வழங்கியுள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் அதேவேளை அவுஸ்திரேலிய மக்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதும் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
சீன பிரஜைகள் மீதான தடை உரிய காரணங்களிற்காகவே நடைமுறைக்கு வந்தது என தெரிவித்துள்ள அமைச்சர் தேவைப்படும்சந்தர்ப்பங்களில் நாங்கள் கருணையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்த முயல்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
லியின் தாய் கொரேனோ வைரஸ் பாதிப்பிற்குள்ளாகாத பகுதியை சேர்ந்தவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
அவரிற்கு சுற்றுலாப்பயண விசாவை அவுஸ்திரேலியா வழங்கியுள்ளது.
அவர் அவுஸ்திரேலியா வருவார், அவரை விதிமுறைகளிற்கு ஏற்ப14 நாட்கள் தனிமைப்படுத்துவோம் என தெரிவித்துள்ள பதில் குடிவரவுதுறை அமைச்சர் அவர் தனது மகனை பார்ப்பதற்கும் மகனின் இறுதிகிரியைகளில் ஈடுபடுவதற்கும் உதவப்போகின்றோம் என தெரிவித்துள்ளார்.