சஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள அரசியல் கூட்டணியில் செயலாளர் நாயகமாக யாரை நியமிப்பது என்ற சர்ச்சைக்கு தீர்வு காணும் வகையில் நாளை மறுநாள் (10) திங்கட்கிழமை கூடும் செயற்குழுவில் வாக்கெடுப்பை நடத்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
புதிய அரசியல் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க சஜித் பிரேமதாச முன்னதாக தீர்மானித்த நிலையில் அதற்கு செயற்குழு அனுமதியும் கிடைத்திருந்தது.
இந்நிலையில் ரவி கருணாநாயக்க அல்லது நவீன் திஸாநாயக்கவை இந்த பதவியில் அமர்த்துமாறு ரணில் தரப்பு யோசனை தெரிவித்துள்ளது.
இதனையடுத்தே செயலாளர் தொடர்பில் வாக்கெடுப்பொன்றை நடத்தி இறுதித் தீர்மானத்தை எடுக்க ரணில் முடிவு செய்துள்ளார்.
ஏற்கனவே ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் இறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் செயற்குழுவில் இவ்வாறு வாக்கெடுப்பு கோருவது குறித்து சஜித் தரப்பு எம்பிக்கள் கொந்தளிப்பு ஏற்பட்டிருப்பதாக அறியமுடிகிறது.
Eelamurasu Australia Online News Portal