செய்திமுரசு

மொழியாலும் ஆக்கிரமிக்கின்றதா சீனா?

ஆசிய பொலிஸ்காரனாகும் சகல தகுதிகளும் சீனாவுக்கு இருக்கின்றது. அந்த இடத்தைப்பிடிப்பதற்குரிய தகுதி இன்னும் இந்தியாவுக்கு இருக்கின்றதா என்றால் சந்தேகமே. சகல துறைகளிலும் இன்று ஆசியாவில் முதலிடத்திலிருக்கும் சீனா அமெரிக்காவிற்கு சவாலாக உருவெடுத்துள்ளது. எவ்வாறு ஒரு நாட்டிற்குள் உட்புகுந்து அந்நாட்டின் சகல விடயங்களையும்  தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதை சீனாவிடம் தான் கற்க வேண்டும். சீனாவின் ஆக்கிரமிப்பு ஒரு நாட்டின் பொருளாதார சந்தை மட்டுமல்ல மொழி,கலாசாரம், அரசியல் ஆகியவற்றிலும் அது தனது கையை ஓங்கச்செய்துள்ளது என்பது இலங்கையைப்பொறுத்தவரை பொருத்தமாகத்தான் இருக்கின்றது போலும். சீனா ...

Read More »

உலக வங்கி தலைவர் பதவிக்கு இந்திரா நூயி?

உலக வங்கி தலைவர் பதவிக்கு இந்திரா நூயியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார். உலக வங்கியின் தலைவர் பதவியில் உள்ள ஜிம் யாங் கிம், அடுத்த மாதம் பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார். அவர் தனியார் உள்கட்டமைப்பு முதலீடு நிறுவனம் ஒன்றில் சேரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் உலக வங்கியின் தலைவர் பதவிக்கு அடுத்து வரப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பதவிக்கு தமிழ்நாட்டில் சென்னையில் தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்த பெண்ணான இந்திரா நூயி ...

Read More »

மிக மோசமான நிலைமையில் அவுஸ்திரேலியா!

இரண்டாம் உலக போருக்கு பின்னர் மிக மோசமான நிலைமை ஒன்று அவுஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டுள்ளது. 1939ஆம் ஆண்டிற்கு பின்னர் அதாவத சரியாக 80 ஆண்டுகளின் பின்னர் அவுஸ்திரேலியா முகம் கொடுத்துள்ள மிக மோசமான வெப்பநிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் வீசும் அனல் காற்றால் சில பகுதிகளில் வெப்பநிலை சுமார் 45 டிகிரி செல்சியஸை எட்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. வானிலை நிலைய அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். அடுத்த நான்கு நாட்களில் சராசரி அளவைக் காட்டிலும் அங்கு வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்று அவர்கள் கூறினர். ...

Read More »

சம்பந்தரின் கோரிக்கையும் சம்பந்தருக்கான கோரிக்கையும்!

நாட்டில் மீண்டும் ஒரு குருதிக்களரி ஏற்படாமல் இருக்க வேண்டுமெனின் புதிய அரசமைப்பு உருவாக வேண்டும். இனவாதத்தைக் கக்காமல், பிரிவினையை ஏற்படுத்தாமல் மைத்திரி, ரணில், மஹிந்த தரப்புகளைச் சேர்ந்தோர்; ஓரணியில் நின்று, புதிய அரசமைப்பு வெற்றி பெற உழைக்க வேண்டும். இவ்வாறாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். எந்தத்தடைகள் வந்தாலும் அதைத் தகர்த்தெறிந்து, முழுமூச்சுடன் பயணிப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தரப் பகைவனும் இல்லை எனக் கூறுவார்கள். அவ்வகையில் ஜனாதிபதி ...

Read More »

சிறிலங்கா-அமெரிக்கா முக்கிய பேச்சுவார்த்தை!

சிறிலங்காவில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு பின்னர் உருவாகியுள்ள நிலைமை குறித்து  அமெரிக்காவும் சிறிலங்காவும்  முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளன. அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்;டுள்ள  நிதியமைச்சர் மங்களசமரவீர தலைமையிலான குழுவினர் அமெரி;க்காவின் தலைமை பிரதி உதவி இராஜாங்க செயலாளர்  அலைஸ் வெல்சையும் மில்லிலேனியம்  சலஞ்ச்  ஒத்துழைப்பின் பிரதம அதிகாரியையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர் அலைஸ் வெல்ஸ் மற்றும் சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் ஆகியோருடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம் என  பொருளாதார சீர்திருத்த விவகாரங்களிற்கான அமைச்சர் ஹர்சா டி சில்வா தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.   பிராந்திய ...

Read More »

கேமரூனில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள் கடத்தல்!

கேமரூனின் தென்மேற்கு பிராந்தியத்தில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள் கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில், ஆங்கிலம் பேசும் மக்கள் அதிகம் வாழும் தென்மேற்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களை தனி சுதந்திர நாடாக அறிவிக்க வலியுறுத்தி, பிரிவினைவாத அமைப்புகள் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவர்களை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக அரசுப் படைகளுக்கும், பிரிவினைவாத அமைப்புகளுக்குமிடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பிராந்தியத்தில் பியூவா-கும்பா நெடுஞ்சாலையில் சென்ற பயணிகள் பேருந்தை, ...

Read More »

வவுனியாவில் 694 ஆவது நாளாகவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத் தர அமெரிக்கா வரவேண்டும் என வலியுறுத்தி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக 694 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினாலேயே இன்று இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.   முன்னதாக வவுனியா கந்தசாமி கோவிலுக்கு சென்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அங்கு வழிப்பாடுகளை மேற்கொண்ட பின்னர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறு ...

Read More »

ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பலி!

ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி ஜெர்மனியை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒருவர் மாயமானார். ஆஸ்திரியாவின் வோரேர்ல்பெர்க் மாகாணத்தில் லெக் என்கிற மலைக் கிராமம் உள்ளது. பனிப்பிரதேசமான இங்கு பனிச்சறுக்கு விளையாட்டு பிரபலமானது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இங்கு ஏராளமானவர்கள் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி ஜெர்மனியை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒருவர் மாயமானார். அவரின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

Read More »

ஆஸ்திரேலியா அணி நிதான ஆட்டம்!

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று  அடிலெய்டில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது, தற்போது ஆஸ்திரேலியா அணி  நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறது. 25.4 ஓவரில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு  137 ரன்கள் எடுத்தது. இதில் கேப்டன் பிஞ்ச் 6 ரன்,அலெக்ஸ் காரி 18 ரன்,உஸ்மான் கவாஜா 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பீட்டர் ஹேன்ட்ஸ் ...

Read More »

மைத்திரிபால சிறிசேன பிலிப்பைன்ஸ் பயணம்!

சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தை சற்றுமுன்னர் மேற்கொண்டுள்ளார். 4 நாட்கள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு பிலிப்பைன்ஸ் செல்லும் மைத்திரி  அங்கு பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார். நாளையதினம் பிலிப்பைன்ஸ் மலகாநாங்கில் நடைபெறும் விசேட நிகழ்வில் கலந்துக் கொள்ளும்  சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அந்த நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டேட்ரே உத்தியோகபூர்வமாக வரவேற்பார். இதன்போது இரு நாட்டின் ஜனாதிபதிகளுக்குமிடையிலான முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பில் அரசியல், பொருளாதார, விவசாய, கலாசார மற்றும் மக்கள் தொடர்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதுடன் ...

Read More »