சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தை சற்றுமுன்னர் மேற்கொண்டுள்ளார்.
4 நாட்கள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு பிலிப்பைன்ஸ் செல்லும் மைத்திரி அங்கு பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
நாளையதினம் பிலிப்பைன்ஸ் மலகாநாங்கில் நடைபெறும் விசேட நிகழ்வில் கலந்துக் கொள்ளும் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அந்த நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டேட்ரே உத்தியோகபூர்வமாக வரவேற்பார்.
இதன்போது இரு நாட்டின் ஜனாதிபதிகளுக்குமிடையிலான முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பில் அரசியல், பொருளாதார, விவசாய, கலாசார மற்றும் மக்கள் தொடர்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதுடன் அந்நாட்டின் ஏனைய அரசியல் தலைவர்களையும் சந்தித்துக்கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal