கேமரூனின் தென்மேற்கு பிராந்தியத்தில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள் கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில், ஆங்கிலம் பேசும் மக்கள் அதிகம் வாழும் தென்மேற்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களை தனி சுதந்திர நாடாக அறிவிக்க வலியுறுத்தி, பிரிவினைவாத அமைப்புகள் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவர்களை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக அரசுப் படைகளுக்கும், பிரிவினைவாத அமைப்புகளுக்குமிடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தென்மேற்கு பிராந்தியத்தில் பியூவா-கும்பா நெடுஞ்சாலையில் சென்ற பயணிகள் பேருந்தை, ஆயுதம் தாங்கிய கும்பல் நேற்று தடுத்து நிறுத்தியது. பின்னர், பயணிகளின் அடையாள அட்டைகளை பறித்த அந்த கும்பல் அனைவரையும் கீழே இறக்கி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கடத்திச் சென்றது. பேருந்து சாரதியை பேருந்து நிலையத்திற்கு திரும்பி செல்லும்படி, அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் மிரட்டி அனுப்பி உள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal