ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி ஜெர்மனியை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒருவர் மாயமானார்.
ஆஸ்திரியாவின் வோரேர்ல்பெர்க் மாகாணத்தில் லெக் என்கிற மலைக் கிராமம் உள்ளது. பனிப்பிரதேசமான இங்கு பனிச்சறுக்கு விளையாட்டு பிரபலமானது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இங்கு ஏராளமானவர்கள் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது.
இதில் சிக்கி ஜெர்மனியை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒருவர் மாயமானார். அவரின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
Eelamurasu Australia Online News Portal