செய்திமுரசு

அவுஸ்திரேலியாவுக்கு ரகசியமாக கொண்டு வரப்பட்ட அகதிகள்!

நவுறு தடுப்பு முகாமிலுள்ள பல அகதிகளை இரகசியமாக அரசு, அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. குறித்த அகதிகள் தொடர்பில் பல அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துவரும் ஆளும் Morrison அரசு இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்த இரகசிய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளாக கூறப்படுகிறது. நவுறு தீவில் உள்ள அகதிகளை நியூஸிலாந்து அரசு ஏற்றுக்கொள்வதாக தொடர்ந்து சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் அதனை அவுஸ்திரேலிய அரசு மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே முக்கியமாக சிறுவர்கள் குழந்தைகளுடன் உள்ள குடும்பங்களை முதற்கட்டமாக ரகசியமாக அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...

Read More »

10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் அர்ஷ்தீப் சிங், இங்கிலாந்தின் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம் நடத்திய போட்டியில் கலந்துகொண்டு `வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்’ விருதை வென்று சாதித்திருக்கிறார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த போட்டோகிராபர் ரன்தீப் சிங் என்பவரின் மகனான அர்ஷ்தீப் சிங், தனது 6 வயதாக இருக்கும்போது கடந்த 2012-ம் ஆண்டு வைல்ட் லைஃப் போட்டோகிராபியைத் தொடங்கியிருக்கிறார். அவரது தந்தையான ரன்தீப் சிங்கும் போட்டோகிராபர் என்பதால், அவருடன் இணைந்து பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து இயற்கை அழகைத் தனது கேமராவில் ...

Read More »

வடக்கில் “மரபுரிமை மையம்” இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது!

தமிழ் மக்களின் கலை, கலாசாரங்களை வெளிக்கொண்டு வரும் வகையில், வடக்கில் “மரபுரிமை மையம்” வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் ஆகியோரால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்வியலில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் மற்றும் கலாசாரங்கள் என்பன அருகி வருவதாகவும் தமிழர்களின் புராதன அடையாளங்களை, போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர்கள் அழித்தனர். அத்துடன், இவர்களுக்கு இணையாக, இலங்கை அரசாங்கமும், தமிழர்களின் புராதன அடையாளங்களை அன்று தொட்டு இன்று வரை அழித்து வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், எனவே, தமது எதிர்காலச் சந்ததியினருக்கு, ...

Read More »

இராணுவம் வசமிருந்த 5 ஏக்கர் காணி விடுவிப்பு!

வடக்கில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களின் சுமார் 87 ஏக்கர் காணிகளை விடுவிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் இராணுவத்தின் வசம் காணப்பட்ட 5 ஏக்கர் காணிகள் மன்னார் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேசச் செயலக காணி அலுவலகர் க.வசந்தன் தெரிவித்துள்ளார். 1990 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தின் வசம் இருந்த குறித்த 5 ஏக்கர் காணியும் சுமார் 28 வருடங்களின் பின்னர் உரிமையாளர்களிடம் கையளிக்கும் வகையில் மன்னார் பிரதேசச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த 5 ...

Read More »

பாகிஸ்தானில் இருந்து வரும் யாத்திரிகர்களுக்கு உம்ரா வரி ரத்து !

பாகிஸ்தானில் இருந்து உம்ரா யாத்திரை செய்ய வரும் பக்தர்களுக்கான வரியை ரத்து செய்ய சவுதி அரேபியா அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இஸ்லாம் தோன்றிய புனித பூமியான சவுதி அரேபியா மற்றும் ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் அந்த மார்க்கத்துடன் தொடர்புடைய சில புனிதஸ்தலங்களும், முஹம்மது நபியின் மகள், பேர பிள்ளைகள் மற்றும் சில கலிபாக்களின் நினைவிடங்களும் அமைந்துள்ளன. இந்த இடங்களை பார்வையிட்டு தங்களது காணிக்கைகளை செலுத்தும் நோக்கத்தில் உலகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுதோறும் புனிதப்பயணம் மேற்கொள்கின்றனர். ஹஜ் யாத்திரையைப்போல் கடமையாக்கப்படா விட்டாலும் ...

Read More »

எவரும் சாதிக்கலாம் என்ற கலாம்!

அகரத்தில் இருந்து உயர்ந்தெழுந்து சிகரத்தைத் தொட்ட ‘இந்திய ஏவுகணை நாயகன்’, இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். பெருமைகளைக் கடந்து ஓர் ஆசானாக மாணவர்களை ஊக்குவிக்கும் கலந்துரையாடல்களில் என்றுமே கலாம் ஈடுபட்டுவந்தார். மதராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் (எம்.ஐ.டி.) 1960-ல் விண்வெளிப் பொறியியல் பட்டம் பெற்றவுடன் விஞ்ஞானியாகத் தன் பணிவாழ்க்கையைத் தொடங்கியவர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கழித்துக் கல்வி புலத்துக்கே திரும்பினார் என்பது வியப்பளிக்கிறது. குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், சோமாலியாவைச் சேர்ந்த கல்வி – ...

Read More »

தமிழ் குடும்பம் ஒன்று அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்படவுள்ளது!

பிரித்தானியாவில்  உள்ள ஈழத் தமிழ் குடும்பம் ஒன்று அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பக்கவாதம் ஏற்படும் அபாயத்தில் உள்ள ஈழத் தமிழர் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளனர். எனினும் அவருக்கு விமானத்தில் ஆபத்து உள்ளதாக கூறி குடும்பத்தினர் 4 வைத்தியர்களை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்ற சங்கரப்பிள்ளை பாலசந்திரன் கடந்த 6 வருடங்களில் பக்க வாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். 60 வயதான குறித்த நபர் கடந்த 2007ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு சென்ற நிலையில் அவரது ...

Read More »

கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு உண்மையை கூற வேண்டும்!- சுரேஸ்

தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நன்மைகளை செய்யாத புதிய அரசாங்கத்தினை அதன் இறுதி கட்டத்திலும் காப்பாற்றுவதனையே முதன்மையாக கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமசந்திரன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் சிறிலங்கா சுதந்திர கட்சியும் ஜக்கிய தேசிய கட்சியும் அக்கறையுடன் செயற்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் மக்களது இரு பிரதான பிரச்சனைகளான தேசிய இனப் பிரச்சனையையும் , யுத்தத்திற்கு பின்னரான பிரச்சனையையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றோடு ஒன்று கலந்து நியாயம் ...

Read More »

ஒருநாள் போட்டியில் 571 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளூர் ஆஸ்திரேலியா அணி சாதனை!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்கள் உள்ளூர் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் நார்த்தென் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் பெண்கள் கிரிக்கெட் போட்டியில் நார்த்தென் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணியும், போர்ட் அடிலெய்ட் அணியும் மோதின. டாஸ் வென்ற நார்த்தென் டிஸ்டிரிக்ட்ஸ் அணி அதிரடியாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதமடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 249 ரன்கள் சேர்த்தது. மெக் பர்லின் 80 பந்துகளில் 136 ரன்களும், சாவில் 56 பந்துகளில் 120 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். அடுத்து ...

Read More »

ஆஸ்திரேலிய தூதரகம், ஜெருசலேமுக்கு மாற்றம்!-பிரதமர் ஸ்காட்

கிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமியர்கள் என 3 மதத்தினருக்கும் புனித நகரமாக திகழக்கூடிய ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். உலகளாவிய எதிர்ப்புக்கு இது வழிவகுத்தது. ஆனாலும், அடுத்த கட்டமாக கடந்த மே மாதம், ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்காவை பின்பற்றி ஆஸ்திரேலியாவும் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கவும், தனது தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றவும் பரிசீலித்து வருகிறது. இதை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் அறிவித்தார். ...

Read More »