அவுஸ்திரேலியாவுக்கு ரகசியமாக கொண்டு வரப்பட்ட அகதிகள்!

நவுறு தடுப்பு முகாமிலுள்ள பல அகதிகளை இரகசியமாக அரசு, அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

குறித்த அகதிகள் தொடர்பில் பல அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துவரும் ஆளும் Morrison அரசு இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்த இரகசிய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளாக கூறப்படுகிறது.

நவுறு தீவில் உள்ள அகதிகளை நியூஸிலாந்து அரசு ஏற்றுக்கொள்வதாக தொடர்ந்து சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் அதனை அவுஸ்திரேலிய அரசு மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே முக்கியமாக சிறுவர்கள் குழந்தைகளுடன் உள்ள குடும்பங்களை முதற்கட்டமாக ரகசியமாக அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு அவுஸ்திரேலியாவுக்குள் வந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அரசு எந்த விவரமும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவொருபுறம் இருக்க, அகதிகள் நல அமைப்புக்கள் வெளியிட்டுளள் தகவல்களின்படி, 15 பேர் சில குடும்பங்களுடன் அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் சில குடும்பங்கள் இந்த வாரம் கொண்டுவரப்படுவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.