தமிழ் மக்களின் கலை, கலாசாரங்களை வெளிக்கொண்டு வரும் வகையில், வடக்கில் “மரபுரிமை மையம்” வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் ஆகியோரால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்வியலில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் மற்றும் கலாசாரங்கள் என்பன அருகி வருவதாகவும் தமிழர்களின் புராதன அடையாளங்களை, போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர்கள் அழித்தனர். அத்துடன், இவர்களுக்கு இணையாக, இலங்கை அரசாங்கமும், தமிழர்களின் புராதன அடையாளங்களை அன்று தொட்டு இன்று வரை அழித்து வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், எனவே, தமது எதிர்காலச் சந்ததியினருக்கு, இவற்றை எடுத்துக் கூறும் வகையில் “மரபுரிமை மையம்” மற்றும் “தமிழர் நாகரிக மையம்” எனும் தொனிப்பொருள்களிலான கருத்திட்டங்களை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கவுள்ளது.
அந்தவகையில், யாழ்ப்பாணம் – நல்லூர்க் கோவிலுக்கு அண்மையிலுள்ள சாதனா பாடசாலையின் ஒரு பகுதியை ஒதுக்கி “மரபுரிமை மையம்” கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.
பண்டையகால உபகரணங்களைக் காட்சிப்படுத்தி இன்று வியாழக்கிழமை (18) காலை 9 மணிக்கு, பாடசாலையில் மரபுரிமை மையம்” வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் ஆகியோரால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal