செய்திமுரசு

யுத்தத்தின் வடுக்கள் : ஒட்டுசுட்டான் பகுதியில் தொடரும் அவலம்..!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பனிக்கன்குளம் கிழவன்குளம் போன்ற பகுதிகளில் வாழும் அதிகளவான குடும்பங்கள் தொழில் வாய்ப்பின்றியும் வருமானங்கள் இன்றியும் காட்டில் விறகு வெட்டியே தமது வாழ்வாதாரத்தை கொண்டு வாழ்ந்து வருதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தில் கால் ஒன்றை இழந்த நான்கு பெண்குழந்தைகளின் தந்தையான  பாலசுந்தரம் ஜெகதீஸ்வரன் வறுமையால் மிகவும் கஷ்டத்திற்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியார் தெரிவித்தார். கிழவன்குளம் கிராமத்தில் வாழ்ந்து வரும் நான்கு பெண்குழந்தைகளின் தந்தையான  பாலசுந்தரம் ஜெகதீஸ்வரன் யுத்தத்தில் ஒரு காலை இழந்தநிலையில் அவரும் அவரது ...

Read More »

விசேட படைப்பிரிவின் இரகசியங்களை அம்பலப்படுத்தினார் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈராக்கிற்கான தனது விஜயத்தின் போது அங்கு இரகசியமாக செயற்படும் அமெரிக்க நேவிசீல் படைப்பிரிவினர் குறித்த தகவல்களை தற்செயலாக  அம்பலப்படுத்தியுள்ளார் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன ஈராக்கிற்கான விஜயத்தின் பின்னர் நேவி சீலை சேர்ந்த ஒருவருடன் தான் காணப்படும் புகைப்படத்தை டிரம்ப் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டர் செய்தியில் டிரம்;ப் நேவீ சில் வீரரின் பெயர் அமெரிக்காவில் அவர் எங்கு வாழ்கின்றார் அவரது முகாம் எங்குள்ளது போன்ற விபரங்களை தெரிவித்துள்ளார். இதன் மூலம் வழமையாக இரகசியமாக பாதுகாக்கப்படும் விடயங்களை அவர் ...

Read More »

உண்மைகளை கண்டுபிடிப்பதற்கான முயற்சி தொடரும்- சாலிய பீரிஸ்

காணாமல்போனவர்கள் குறித்த உண்மைகளை கண்டுபிடிப்பதில்  உறுதியாக உள்ளதாக காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். காணாமல்போதல் எவ்வாறான நிலையில் இடம்பெற்றது  அவ்வாறு காணாமல்போனவர்களிற்கு என்ன இடம்பெற்றது என்ற உண்மைகளை வெளிக்கொணர்வது குறித்து உறுதியாகவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார் மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் குறித்த விசாரணைகளிற்கு காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் உதவுவது அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார் விசாரணை நடவடிக்கைகளின் உயர்தராதரத்தை பேணுவதுடன் மக்களின் நம்பிக்கையை காப்பாற்றவேண்டியதன் அவசியம் குறித்து உயர் அதிகாரிகளிற்கு தெளிவுபடுத்தியுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார் ...

Read More »

‘ஒக்டோபர் 26’ சூழ்ச்சியின் முழு விபரம் விரைவில்…!

சிறிலங்காவை  50 நாட்களுக்கு மேலாக நாசமாக்கிய ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சியின் முழு விபரத்தை விரைவில் வெளியிடவுள்ளேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்தி நிறுவனமொன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,   நாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாத்திரம் தொடர்புபடவில்லை. ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் முழுக் குடும்பமும் ...

Read More »

மெல்போர்ன் போட்டியில் ஆஸி. தடுமாற்றம்!

மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முன்னணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா (106 ரன்கள்), விராட் கோலி (82 ரன்கள்), ரோகித் சர்மா (63 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் மெல்போர்னில் அதிகபட்ச ஸ்கோரை ...

Read More »

நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்

1978ல், நிறைவேற்று அதிகார அதிபர் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டபோது, ‘தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் ஒருவர் பைத்தியக்காரராக இருந்தால் என்ன நடக்கும்’என லங்காசமசமாஜக்  கட்சியைச் சேர்ந்த என்.எம்.பெரேரா கேள்வியெழுப்பியிருந்தார். சிறிலங்காவில் தற்போதுஅரசியற் குழப்பங்கள் இடம்பெற்றபோது இந்த வினாவானது மீண்டுமொருமுறை நினைவுகூரப்படுகிறது. சிறிலங்காவின் அரசியல்  சீர்திருத்தத்தில்  ஏற்பட்ட இந்த இடைவெளியானது இன்னமும் நிரப்பப்படவில்லை. அரசியல் சீர்திருத்தத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும்  இப்பிரச்சினைக்கு இவை எவ்விதத்திலும் உதவவில்லை. சிறிலங்காவின் முதலாவது நிறைவேற்று அதிபரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன முட்டாளல்ல, ஆனால் அவர் மோசமான ஒரு சந்தர்ப்பவாதியாகத் திகழ்ந்துள்ளார்.  1978ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனஅரசியல் சாசனத்தை வரைந்த ...

Read More »

மெல்போர்ன் பிட்ச் ரன்கள் சேர்க்க மிகவும் கடினமாக இருந்தது!

மெல்போர்ன் ஆடுகளம் ரன்கள் சேர்க்க மிகவும் கடினமாக இருந்தது. ஒருநாளைக்கு 200 ரன்கள் என்பது மிகக் கடினமானது என்று புஜாரா தெரிவித்துள்ளார். மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன் புஜாரா சதம் அடித்தார். 280 பந்தில் சதம் அடித்த புஜாரா, 319 பந்தில் 106 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 204 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்தார். இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடிந்த ...

Read More »

உக்ரைனில் ராணுவச் சட்டம் முடிவுக்கு வந்தது!

ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் நாட்டில் கடந்த ஒரு மாதகாலமாக நடைமுறையில் இருந்த ராணுவச் சட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக அதிபர் அறிவித்துள்ளார். உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், கிரிமியா அருகே கெர்ச் ஜலசந்தியில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்யா கடந்த மாதம் கைப்பற்றியது. தங்கள் பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி இந்த நடவடிக்கையை ரஷ்ய ராணுவம் எடுத்தது. ரஷ்யா மற்றும் ...

Read More »

மட்டக்களப்பில் இராணுவத்தினர் ஆக்கிரமித்திருந்த 8.5 ஏக்கர் காணி விடுவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 8.5 ஏக்கர் காணி  விடுவிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக ,இராணுவத்தினரால் கையளிக்கப்பட்ட நிகழ்வு இன்று வியாழக்கிழமை இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதி செயலணியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர் பயன்படுத்தி வந்த 8.5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு அதன் ஆவனங்களை கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கபில அநுர ஜெயசேகரவினால் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிடம் உத்தியோக பூர்வமாக கையளித்தார். இதையடுத்து கையளிக்கப்பட்ட காணி ஆவனங்களை கிழக்கு மாகாண ஆளுநர் ...

Read More »

மஹிந்தவிற்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்குவது சட்டத்துக்கு புறம்பானது!

மஹிந்த ராஜபக்ஷவும் ஆளும் கட்சியின் பங்காளர் என்ற வகையில் அவருக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்குவது சட்டத்துக்கு புறம்பானதாகும். ஆகவே மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. மேலும், 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதிக்கு பின்னரே பொது தேர்தல் இடம்பெரும். அதுவரையில் பொது தேர்தலை நடத்தப்போவதுமில்லை. ஆனால் எதிர்வரும் ஜனவரி மாதத்தின் பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆலோசனை வழங்குவதாகவும் அந்த கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இன்று ...

Read More »