மஹிந்த ராஜபக்ஷவும் ஆளும் கட்சியின் பங்காளர் என்ற வகையில் அவருக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்குவது சட்டத்துக்கு புறம்பானதாகும். ஆகவே மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.
மேலும், 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதிக்கு பின்னரே பொது தேர்தல் இடம்பெரும். அதுவரையில் பொது தேர்தலை நடத்தப்போவதுமில்லை. ஆனால் எதிர்வரும் ஜனவரி மாதத்தின் பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆலோசனை வழங்குவதாகவும் அந்த கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இன்று வியாழக்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்தக்கொண்டு கேள்விகளுக்கு போதே ஐக்கிய தேசிய கட்சின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கேள்வி: மத்தியவங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கல்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான விபரங்கள் அறிக்கையிடப்படுமா?
பதில்: அரச சொத்துக்களை திருடியவர்களுக்கு கட்டாயமாக தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவேண்டும். இழஞ்ச ஊழல் மோசடி தொடர்பான அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமாயின் ஐக்கிய தேசிய கட்சியும் இந்த பிரச்சினைகளை திர்த்துக்கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராகும்.
பிணைமுறி விவகாரம் கடந்த 2007 அண்டு முதல் இடம்பெற்றுவந்தள்ளது. இது தொடர்பான விபரங்கள் விரைவில் வெளிடப்பட வேண்டும். யார் ஊழல் செய்தாலும் குற்றம் குற்றமாகவே கருதப்படும் என்றார்.