விசேட படைப்பிரிவின் இரகசியங்களை அம்பலப்படுத்தினார் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈராக்கிற்கான தனது விஜயத்தின் போது அங்கு இரகசியமாக செயற்படும் அமெரிக்க நேவிசீல் படைப்பிரிவினர் குறித்த தகவல்களை தற்செயலாக  அம்பலப்படுத்தியுள்ளார் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன

ஈராக்கிற்கான விஜயத்தின் பின்னர் நேவி சீலை சேர்ந்த ஒருவருடன் தான் காணப்படும் புகைப்படத்தை டிரம்ப் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

அந்த டுவிட்டர் செய்தியில் டிரம்;ப் நேவீ சில் வீரரின் பெயர் அமெரிக்காவில் அவர் எங்கு வாழ்கின்றார் அவரது முகாம் எங்குள்ளது போன்ற விபரங்களை தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வழமையாக இரகசியமாக பாதுகாக்கப்படும் விடயங்களை அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

டிரம்ப் அமெரிக்காவின் சீல் டீம் பைவ் வீரர்களுடன் காணப்படுகின்றார்  அவர்களுடைய முகங்கள் மறைக்கப்படவில்லை என அமெரிக்க ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

 

நேவி சீல் குறித்த விபரங்கள் மிகவும் இரகசியமானவை என தெரிவித்துள்ள பாதுகாப்பு துறையினர் அவர்களின் முகங்களை மறைத்த பின்னரே புகைப்படங்களை வெளியிடுவது வழமை என தெரிவித்துள்ளனர்

மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும்  விசேட படையினரின் பாதுகாப்பே முக்கியம் என குறிப்பிட்டுள்ள முன்னாள் அதிகாரியொருவர் உண்மையான பெயர் உட்பட அனைத்து விபரங்களும் இரகசியமாக பேணப்படும் என தெரிவித்துள்ளார்.