செய்திமுரசு

நல்லிணக்கத்தை கொண்டுவருவேன் என்று உறுதி கூற வேட்பளார் எவருமில்லை !

இதுவரை அளிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரசார உறுதி மொழிகளை கணக்கிட்டுப் பார்த்தால் இத்தேர்தலுக்காக வழங்கப்பட்டுள்ள உறுதி மொழிகளே பெருமளவினதாக உள்ளன. ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளர்களுமே ஏனைய வேட்பாளர்களை விட அதிகமான உறுதி மொழிகளை வாக்காளர்களிடம் வழங்க உறுதி கொண்டுள்ளமையினை அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பார்க்கும் போது தெரிய வருகிறது. ஒரு வேட்பாளர் நெல் உற்பத்திக்கு தேவையான பசளைகளை இலவசமாக தருவேன் என்றால் இன்னொருவரோ அனைத்து விவசாய நடவடிக்கைகளுக்குமே இலவசமான பசளையை நான் பதவிக்கு வந்தால் தருவேன் என்கிறார். தொழிலாளர் வகுப்பினரது வேதனங்களை நான் அதிகரிப்பேன் என்று ...

Read More »

ஆஸ்திரேலியாவில் கார்களில், சமையலறைகளில் உறங்கும் அகதிகள்!

ஆஸ்திரேலியாவில் அகதிகளாக உள்ளவர்கள் மிகவும் நெருக்கமான தங்குமிடங்களில், கார்களில், ஹோட்டல் சமையலறைகளில் இரவில் தூங்க வேண்டிய வீடற்ற அவலநிலை இருந்து வருவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய கத்தோலிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், முறையான மீள்குடியேற்ற வசதிகள் இல்லாததால் இந்த வீடற்ற நிலை அகதிகளிடையே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக 24 இளம் அகதிகளை பின் தொடர்ந்த ஆய்வாளர் டாக்டர் ஜென் கெளச், இந்த காலக்கட்டத்தில் அகதிகள் பல மோசமான, பாதுகாப்பற்ற, தற்காலிக இடங்களில் தூங்கியதைக் கண்டறிந்துள்ளார். சிலர் பள்ளியிலோ பணியிடங்களிலோ தங்கியுள்ளனர், ...

Read More »

சந்திரிகா புதிய கூட்டணியில் இணைந்தமை ஜனநாயக ஆட்சிக்கு முக்கியமானதொரு விடயம்!

புதிய ஜனநாயக முன்னணியின் அங்கத்துவக் கட்சிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான குழுவினர் ஒன்றிணைந்து நாட்டில் ஜனநாயக அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு உறுதியளித்திருப்பது மிக முக்கியமான விடயமாகும். நாட்டில் அபிவிருத்தி, சமத்துவம், சுயாதீனத்துவம் என்பவற்றை ஏற்படுத்தி, சௌபாக்கியமானதொரு இலங்கையை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு பயணிப்பதே எமது இப்புதிய கூட்டணியின் முக்கிய இலக்கு என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு முழுமையான ஆதரவை வழங்கி, அவரை தேர்தலில் வெற்றி பெறச்செய்வதை ...

Read More »

அமெரிக்க உடன்படிக்கைக்கு எதிராக நீதிமன்றில் மனுத் தாக்கல்!

அமெரிக்காவுடன் இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திக் கொள்ளவுள்ள மிலேனியம் சலன்ஞ் கோப்ரேசன் வேலைத்திட்ட ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   இந்த அடிப்படை மனு சட்டத்தரணி தர்ஷன வேரதுவகேவால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். இதேவேளை, அமெரிக்காவுடன் எக்ஸா, எம்சீசீ, சோபா ஆகிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திட ...

Read More »

ஐந்து கட்சிகளின் கூட்டு: அடுத்தது என்ன ?

ஜனாதிபதித் தேர்தலில் முழு அளவிலான தமிழ் பேரத்தை பிரயோகிப்பது என்றால் ஒரே தெரிவு ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர்தான். ஆனால் அதற்கு எந்த ஒரு தமிழ்க் கட்சியும் தயாராக இருக்கவில்லை. அப்படி ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று சிந்தித்த சுயாதீனக் குழுவும் மிகவும் பிந்தி விட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் அதைவிட பிந்தி விட்டார்கள். சுயாதீன குழு கட்சித் தலைவர்களை சந்தித்தபோது அவர்கள் என்ன சொன்னார்கள்? ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு காலம் பிந்தி விட்டது என்றுதானே சொன்னார்கள்? அப்படி என்றால் அதை ...

Read More »

ஆஸ்திரேலியா திறன்வாய்ந்த குடியேறிகளை வரவேற்கிறது!

பெர்த் மற்றும் கோல்ட் கோஸ்ட் என்ற ஆஸ்திரேலிய நகரங்களில் திறன்வாய்ந்த வெளிநாட்டு குடியேறிகள் குடியேறுவதை அந்நாட்டு அரசு ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளது. பிராந்திய விசாவின் கீழ் குடியேறுபவர்களுக்கான இடப்பட்டியலில் இந்நகரங்கள் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் சுமார் 70 சதவீத மக்கள் தொகை சிட்னி, மெல்பேர்ன் மற்றும் பிரிஸ்பேன் உள்ளிட்ட நகரங்களிலேயே மையம் கொண்டிருக்கும் சூழலில், பிராந்திய விசாவுக்கான பட்டியலில் பெர்த் மற்றும் கோல்ட் கோஸ்ட் சேர்க்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் டேவிட் கோலிமன். பிராந்திய ஆஸ்திரேலியாவில் மேலும் 2000 திறன்வாய்ந்த வெளிநாட்டுத் ...

Read More »

ஜனாதிபதித் தேர்தல்; முத‌ற் கோணல்!

நம்மவர்களின் புதிய புதிய நம்பிக்கைகள்தான், வரலாற்று முரண்நகைகளை உருவாக்கிவிடுகின்றன என்பது, காலங்காலமாக நிரூபிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது. சிறுவன் சுர்ஜித், நம்போன்ற பெற்றோர்களின் கவனக்குறைவால் பலியாகி விட்டான். கவனக்குறைவுக்குப் பின்னரான செயற்பாடுகளில் காணப்பட்ட குறைபாடுகளால், அவன் பலியானதாகப் பலர் குறைப்படுகிறார்கள். அதுவும் தவறுதான். இவ்வாறுதான், நம்மிடமே முதற் பிழையை, பிழைகளை வைத்துக் கொண்டு, அதை ஏற்றுக் கொள்ளாமலேயே நாம் எவ்வளவு தூரம்தான் பயணித்துவிட முடியும்; எதைத்தான் சாதித்துவிடமுடியும்;  எதிர்த்தரப்பிடமிருந்து எவற்றை எதிர்பார்க்க முடியும்? இந்த வகையில், பெறுமதியான மிகப்பெரிய பிரச்சினை / கேள்வி ஒன்றுக்கான தீர்மானகரமான ...

Read More »

டுவிட்டரில் அரசியல் விளம்பரங்களுக்கு தடை!

சமூக வலைதளங்களில் அரசியல்வாதிகள் மூலம் தவறான தகவல்கள் பரவி வருவதை தடுக்கும் வகையில், உலக அளவில் அரசியல் விளம்பரங்களை தடை செய்ய டுவிட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. பேஸ்புக், டுவிட்டர் மிக முக்கியமான சமூக வலைத்தளங்கள் ஆகும். உலகில் கோடிக்கணக்கான மக்கள் இந்த வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் சிலர் தவறான தகவல்கள் பரப்புவதற்கு வலைத்தளங்களை பயன்படுத்துவதால் பொது மக்களுக்கும் அரசுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க பல்வேறு நாடுகளில் சைபர் கிரைம் போலீசார் முயன்று வருகின்றனர். இந்நிலையில் டுவிட்டர் பக்கத்தில் அரசியல் விளம்பரங்கள் ...

Read More »

திகில் திரைப்­ப­டத்தை ஒத்த பாக்தாதி மீதான தாக்குதல்!

வடமேற்கு சிரி­யாவில் அமெ­ரிக்க இரா­ணு­வத்தால் மேற்­கொள்­ளப்பட்ட தாக்­குதல் நட­வ­டிக்­கையின் போது  ஐ.எஸ். தீவி­ர­வாதக் குழுவின் தலைவர் தற்­கொலை செய்து கொண்­டுள்­ள­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்தார். ஐ.எஸ். தீவி­ர­வாத குழுத் தலைவர் அமெ­ரிக்க இரா­ணுவ மோப்ப நாயால் துரத்­தப்­பட்ட நிலையில்  சுரங்கப் பாதை­யொன்­றுக்குள் பிர­வே­சித்து தான் அணிந்­தி­ருந்த குண்­டுகள் பொருத்­தப்­பட்ட தற்கொலை மேலங்­கியை வெடிக்க வைத்து உயி­ரி­ழந்­துள்­ள­தாக டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளி­கை­யி­லி­ருந்து ஆற்­றிய உரையில் குறிப்­பிட்­டுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் பக்­தா­தியை இலக்­கு­வைத்துத் தாக்­குதல் நடத்தப்ப­டு­வ­தையும் அவர்   தனது 3 பிள்­ளை­க­ளையும் இழுத்துக் ...

Read More »

சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோருக்கு சிறை!

தபால்மூல வாக்களிப்பின் பின் அது குறித்த விபரங்களையோ அல்லது படங்களையோ பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோருக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நாடு முழுவதிலும் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இன்றும் நாளையம் நாடு முழுவதும் தபால்மூல வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் வாக்களித்த பின் அது குறித்த விபரங்களையோ அல்லது புகைப்படங்களையோ பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...

Read More »