செய்திமுரசு

எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு 2019 – சிட்னி

அவுஸ்திரேலிய நகர் சிட்னியில் மாவீரர் நாள் 2019 நிகழ்வு நவம்பர் 27ஆம் திகதி புதன்கிழமை உணர்வு பூர்வமாக எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. சிட்னி நகரின் புறநகர் ஒன்றின் திறந்தவெளி அரங்கில் நிகழ்ந்த இந்நிகழ்வில் சுமார் 3,000 பேர் கலந்து கொண்டதுடன் இந்நிகழ்வில் சிட்னி வாழ் உறவுகளைச் சேர்ந்த 230 இற்கும் மேற்பட்ட மாவீரர்களின் படங்கள் மாதிரி கல்லறைகளில் வைக்கப்பட்டு அம்மாவீரர்களின் குடும்பங்ளைச் சேர்ந்தவர்கள் ஈகைச்சுடர்கள் ஏற்றி மலர்வணக்கம் செய்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின்போது மைதானம் சிவப்பு மஞ்சள் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டு வாசலில் மாவீரர் நாள் வளைவு தமிழீழத்தில் ...

Read More »

சிறிலங்கா சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டார்!

நியுயோர்க் டைம்ஸ் தமிழில் – ரஜீபன் தேர்தல் முடிவடைந்து சில நாட்களிலேயே, ராஜபக்ச அரசியல் வம்சாவளியை விமர்சிப்பவர்கள் மீதான அரசியல் ரீதியிலான ஒடுக்குமுறைகள் மீண்டும் ஆரம்பமாகிவிட்டன என்ற அச்சம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ராஜபக்ச குடும்பத்தினரின்  மனித உரிமை மீறல்கள் ஊழல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் இலங்கையை விட்டு தப்பியோட முயல்கின்றனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக அச்சத்தை ஏற்படுத்தியுள்ள விடயமாக ஒரு சம்பவம் காணப்படுகின்றது. திங்கட்கிழமை இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தை சேர்ந்த பெண் பணியாளர் ஒருவரை வானில் கடத்திய இனந்தெரியாத நபர்கள் அவரின் ...

Read More »

கோத்தாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்திலீடுபட்ட வைகோ கைது!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட  ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ  வெற்றி பெற்றதையடுத்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கு வந்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடியின் சார்பில் வாழ்த்து தெரிவித்தார். அத்துடன், கோத்தாபய ராஜபக்ஷவை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடியின் சார்பில் அழைப்பு விடுத்தார். இதை ஏற்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு இன்று நண்பகல் புறப்படட்டார். இன்று மாலையில் டெல்லி சென்றடையும் அவருக்கு ...

Read More »

இந்தியா நோக்கி புறப்பட்டார் கோத்தாபய !

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியா நோக்கி புறப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திக்கவுள்ளதுடன், இந்திய பிரதமருடன் இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ஏனைய இந்திய பிரமுகர்கள் பலரை சந்திக்கவுள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ...

Read More »

சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண மக்களின் நிலை?

நாட்டில் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது குறிப்பிட்டார்கள். அவ்வாறு கூறி ஆட்சிபீடமேறியவர்களின் செயற்பாடுகள் தேசிய பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையிலா அமைந்திருக்கின்றன? சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண மக்கள், ஊடகவியலாளர்களின் நிலை என்னவாகும்? இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் வருத்தம் தெரிவிக்கும் அதேவேளை அவற்றைக் கடுமையாகக் கண்டனம் செய்கின்றோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரள குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் ...

Read More »

தாயகத்தில் சிறப்புற நடை பெற்ற மாவீரர் நாள் -2019!

முழங்காலில் மாவீரர் துயிலும் இல்லம் கிளிநொச்சி முழங்காலில் மாவீரர் துயிலும் இல்லத்தில் 3000 அதிகமான மக்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 1750 ஈகைச் சுடர்கள் ஏற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மாவீரரின் தந்தையான கே.நாகராசா பொதுச்சுடரினை ஏற்றியதை அடுத்து ஈகைச் சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலிக்கப்பட்டது.     வடமராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் வடமராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள பகுதியில் பொலிஸாரின் ...

Read More »

அரசியல், போராகப் பேய் வடிவம் எடுத்து நிற்கிறது!

 தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008 எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து கௌரவிக்கும் புனித நாள். ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள். எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக, தன்மானத்துடன் வாழவேண்டும் ...

Read More »

ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்த விசேட சட்டம் அவசியம் – வலியுறுத்திய மஹிந்த தேசப்பிரிய!

தேர்தல் காலப் பகுதியில் ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்கான விசேட சட்டம் ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின்  தலைவர் மஹிந்த தேசப்பிரிய சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வலியுறுத்தியுள்ளார். நேற்றுமுன்தினம் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற சபாநாயகருடன் சந்திப்பின்போதே மஹிந்த தேசப்பிரிய இதனை வலியுறுத்தியுள்ளார். கடந்த 16 ஆம் திகதி நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் கால கட்டத்தில் சில ஊடக நிறுவனங்கள் பக்கசார்பாக நடந்து கொண்ட விதத்தினை சுட்டிக்காட்டியே அவர் இதனை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்த ...

Read More »

தடையை மீறி யாழ் பல்கலையில் எழுச்சியுடன் நினைவேந்தல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் விடுத்த தடையை மீறி சற்றுமுன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த மாணவர்கள் எழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தலை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் விடுத்த தடையை மீறிச் சற்றுமுன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த மாணவர்கள் எழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தலை முன்னெடுத்துள்ளனர். மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் முன்னெடுத்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நிகழ்வுகளை முன்னெடுக்கவும் மாணவர்கள் உள்நுழைவதற்கும் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியால் நேற்று (26) தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று முற்பகல் 10 மணியளவில் அங்கு கூடிய மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்துள்ளனர். தொடர்ந்து ...

Read More »

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் அசஞ்சே சிறையில் உயிரிழக்கும் ஆபத்து!

லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ‘விக்கி லீக்ஸ்’ நிறுவனர் அசஞ்சேக்கு தீவிர சிகிச்சை தேவை என்று 60க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இணைந்து இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரீத்தி பட்டேலுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டு உலகமெங்கும் பிரபலமானவர், ‘விக்கி லீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே. இந்த விவகாரத்தில் ஜூலியன் அசஞ்சேயை கைது செய்ய அமெரிக்கா தீவிரம் காட்டியது. இதற்கிடையே சுவீடனில் இவருக்கு எதிராக 2 பெண்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். இதனால் நாடு கடத்தும் சூழ்நிலை உருவானதால் கடந்த 2012ஆம் ...

Read More »