செய்திமுரசு

முஸ்லீம் வர்த்தகரின் தடுப்பு மூன்று மாதங்களிற்கு நீடிப்பு

இனஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் முகநூலில் பதிவிட்டார் என்றகுற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட முஸ்லீம் வர்த்தகரை மேலும் மூன்றுமாதகாலத்திற்கு தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதிவழங்கியுள்ளது என சிஐடியினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். முகநூலில் இனஒற்றுமையை பாதிக்கும் பௌத்தமதகுருமாரை அவமதிக்கும் பதிவுகளை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட வர்த்தகர் பசால் முகமட் நிசார் என்ற வர்த்தகரையே மூன்று மாதம் தடுத்துவைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவு வழங்கியுள்ளது. ஜனவரி 11ம் திகதி அவர் கைதுசெய்யப்பட்டார். சந்தேகநபர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ள சிஐடியினர் நாட்டில் ...

Read More »

சிறிலங்கா இராணுவ புலனாய்வு பயிற்சிப் பாடசாலை திறப்பு

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கரந்தெனியவிலுள்ள சிறிலங்கா  இராணுவ புலனாய்வு காவல் துறை  தலைமையகத்தில் புலனாய்வுப் பயிற்சிப் பாடசாலைக் கட்டிடத்தை நேற்று(18) திறந்து வைத்தார். இந்தப் பயிற்சிப் பாடசாலை இராணுவ அலுவலர்களுக்கு மட்டுமன்றி விமானப்படை, கடற்படை, காவல் துறை , இலங்கைச் சுங்கம், சிறைச்சாலைத் திணைக்களம் மற்றும் துறைமுக அதிகார சபை உறுப்பினர்களுக்கும் புலனாய்வுத்துறை கற்கை நெறிகளை வழங்கும். இந்தப் பயிற்சிப் பாடசாலையை வெளிநாட்டுத் துருப்புகளுக்காக எதிர்வரும் ஆண்டுகளில் திறப்பதற்கும் சிறிலங்கா  இராணுவம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Read More »

சீர்குலைந்த அவுஸ்திரேலிய ஓபன் ; 47 வீரர்கள் தனிமைப்படுத்தலில்

அவுஸ்திரேலிய ஒபனில் விளைாயடவுள்ள மொத்தம் 47 வீரர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு தங்களின் ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை அவசியம் முன்னெடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து விக்டோரியாவுக்கு பட்டாய விமானங்களில் சென்ற மூவர் கொரோனா தொற்றுக்குள்ளகியுள்ளமை அடையளாம் காணப்பட்டதையடுத்து, அவர்களுடன் தொடர்புகளை பேணி 47 வீரர்களை அவர்களது ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா தொற்றுக்குளானவர்களுடன் தொடர்பினை பேணிய வீரர்கள் தவிர்ந்த மேலும் பலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ...

Read More »

சிவகரனிடம் விசாரணை! மாவீரர் தின அனுஷ்டிப்பு பற்றி துருவல்

தமிழ் தேசிய வாழ்வுரிமைக் இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனிடம் பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மன்னாரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்றைய தினம் வவுனியாவிலிருந்து சென்றிருந்த பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கடந்த ஆண்டு மாவீரர் தினத்தினை நினைவு கூர்ந்தமை தொடர்பில் துருவித்துருவி வினாக்களைத் தொடுத்துள்ளதாக தெரியவருகின்றது. அத்துடன் சமகால அவருடைய சமகால அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், எதிர்காலத்தில் அவ்விதமான நினைவு கூரும் விடயங்களை தவிர்க்குமாறு பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அறிவுரைகளை வழங்கிச்சென்றுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

புலம் பெயர்தோர் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியர்கள் முதலிடம் –ஐ.நா

உலகளவில், புலம் பெயர்ந்து வசிப்போரில், இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளதாக, ஐ.நா., தெரிவித்துள்ளது. தாயகத்திலிருந்து புலம் பெயர்ந்து, வெளிநாடுகளில் வசிப்போர் குறித்து, 2020ம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையை, ஐ.நா., மக்கள் தொகை விவகாரங்கள் பிரிவு அண்மையில் வெளியிட்டது. இவ் அறிக்கையின் அடிப்படையில் ” இந்தியாவைச் சேர்ந்த, 1.80 கோடி பேர், வெளிநாடுகளில் வசித்துவருவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக ஐக்கிய அரபு இராச்சியம், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவில் தான், இந்தியர்கள் அதிகமானோர் வசிக்கின்றனர். அனைத்து கண்டங்கள் மற்றும் பிராந்தியங்களில், வளைகுடா முதல், வட அமெரிக்கா வரையிலும், அவுஸ்திரேலியா முதல், ...

Read More »

உயிரை பணயம் வைத்துப் போராடும் தொழிலாளிகளைக் காப்பாற்றுங்கள்

கிளிநொச்சியில் கடந்த ஒருவாரகாலமாக சங்கத்தின் ஜனநாயக பண்புகளைக் காப்பாற்றுமாறு கோரி தென்னை பனம்பொருள் அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் சாகும்வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டக் களத்தில் அவர்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து கருத்துத் தெரிவிக்கும்போதே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளருமான சுரேஷ் க.பிறேமச்சந்திரன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு: கடந்த ஆறு நாட்களாக கிளிநொச்சி ...

Read More »

தமிழர் திருநாள் -2021 அவுஸ்ரேலியா

எம் தமிழர்களின் மிகமுக்கியமான விழாவான தைப்பொங்கலின் சிறப்புக்களை எம் இளையதலைமுறைக்கு எடுத்துக்காட்டவும், இந்த நாட்டு தமிழ் உறவுகளின் கலாச்சார, கலைச் செழிப்பைக் காட்டும் இனிய பல கலை நிகழ்வுகளையும், எமது பாரம்பரிய விளையாட்டுக்களையும் கண்டுகளிக்கவும் இந்தவிழாக்களுக்கு, தமிழ் கலாச்சார உடையில் வந்து கலந்து சிறப்பூட்ட வேண்டுமென அன்புடன் வேண்டுகின்றோம்.  

Read More »

டிரம்பினை பதவியிலிருந்து நீக்க முடியுமா ? அரசியலில் இருந்து முற்றாக தடை செய்ய முடியுமா?

டொனால்ட் டிரம்பிற்கு எதிராக மீண்டும் அரசியல் குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் இரண்டு தடவைகள் அரசியல் குற்றப்பிரேரணை நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியாக டிரம்ப் மாறியுள்ளார். கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வன்முறைகளை தூண்டினார் என அவருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்க செனெட்டில் டொனால்ட் டிரம்ப் குடியரசுக்கட்சியின் ஜனாதிபதி விசாரணையை எதிர்கொள்கின்றார் அரசியல் குற்றப்பிரேரணை என்றால் என்ன? விசாரணைகளை நடத்துவதற்கதாக அமெரிக்க காங்கிரசில் குற்;றச்சாட்டுகளை கொண்டுவருவதே அரசியல் குற்றப்பிரேரணை என அழைக்கப்படுகின்றது. இது குற்றவியல் நடவடிக்கையில்லை அரசியல் நடவடிக்கை என்பதுமுக்கியமானது. தேசத்துரோகம்,இலஞ்சஊழல் அல்லது ...

Read More »

இலங்கைக்குள் இரண்டு வாரங்களுக்குள் கொரோனா மருந்து!

இலங்கை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கொரோனாவைரஸ் மருந்தினை பெறமுடியும் என இலங்கை எதிர்பார்க்கின்றது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். பைசர் மற்றும் அஸ்டிராஜெனேகா நிறுவனங்களின் மருந்துகளை பெற முயல்வதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு மருந்துகளை கொண்டுவருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகவுள்ளன என குறிப்பிட்டுள்ள அமைச்சர் உலக சுகாதார ஸ்தாபனம்,மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். அஸ்டிரா ஜெனேகாவின் நிறுவனமொன்று இந்தியாவில் உள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் இதன் காரணமாக இலங்கையால் மருந்தினை பெறுவதற்காக தொடர்புகொள்ள முடிகின்றது எனவும் ...

Read More »

நாடாளுமன்ற உறுப்பினர்களை கைப்பற்றி கொலை செய்ய திட்டமிட்டனர்!

அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைப்பற்றி கொலை செய்ய திட்டமிட்டனர் என அமெரிக்க சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நீதித்துறை சட்டத்தரணிகள் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர். அமெரிக்க செனெட்டிற்குள் துணைஜனாதிபதியின் மேசைமீது ஏறிநின்ற கலகத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள ஜக்கொப் சான்சிலே என்பவரின் வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து சட்டத்தரணிகள் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர். அந்த நபரின் வாக்குமூலம் உட்பட ஏனைய ஆதாரங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை கைப்பற்றி அவர்களை கொலை செய்வதே வன்முறையில் ஈடுபட்டவர்களின் நோக்கம் ...

Read More »