அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைப்பற்றி கொலை செய்ய திட்டமிட்டனர் என அமெரிக்க சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க நீதித்துறை சட்டத்தரணிகள் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர். அமெரிக்க செனெட்டிற்குள் துணைஜனாதிபதியின் மேசைமீது ஏறிநின்ற கலகத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள ஜக்கொப் சான்சிலே என்பவரின் வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து சட்டத்தரணிகள் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.
அந்த நபரின் வாக்குமூலம் உட்பட ஏனைய ஆதாரங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை கைப்பற்றி அவர்களை கொலை செய்வதே வன்முறையில் ஈடுபட்டவர்களின் நோக்கம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளன என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள நபர் துணை ஜனாதிபதியின் மேசையில் நீதிவருகின்றது என துண்டொன்றில் எழுதிவைத்துவிட்டு சென்றார் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனா.
நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக அமெரிக்கநீதித்துறை கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்த ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.