செய்திமுரசு

மோடியும் விக்கியும் இரகசிய உரையாடல் – கூர்ந்து அவதானித்தார் சம்பந்தன்

சர்வதேச வெசாக் தின நிகழ்வின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள சிறீலங்கா வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று  (11) விசேட இராப்போசன விருந்து ஒன்றினை கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்திருந்தார். ஜனாதிபதி மாளிகைக்கு வருகைதந்த இந்திய பிரதமரை ஜனாதிபதி வரவேற்றார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், அமைச்சர்களான மங்கள சமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம, நிமல் ...

Read More »

53 மணி நேரம் தொடர்ந்து சமையல் செய்து கின்னஸ் சாதனை!

நாக்பூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஒருவர், தொடர்ந்து 53 மணி நேரம் சமையல் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பிரபல சமையல் கலைஞரான விஷ்ணு மனோகர், கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி காலை 8 மணிக்கு சமையல் செய்யத் துவங்கினார். தொடர்ந்து 53 மணி நேரம் நடுவர்கள் முன்னிலையில் பல்வேறு சமையல் வகைகளை செய்து காட்டிய அவர், இன்று அதிகாலை 5.30 மணியளவில் பக்கோடா செய்து அதனை நடுவர்களிடம் தந்துவிட்டு தனது சாதனை முயற்சியை முடித்துக் கொண்டார். இதற்கு முன்னர் தொடர்ந்து 43 மணி ...

Read More »

சிட்னியில் ஏழை இளைஞர் ஒரே இரவில் லட்சாதிபதியானார்!

நேற்றுவரை(11) வேலை தேடியலைந்த 30+ வயதுடையவர், இன்று $50 மில்லியன் டொலர்களுக்குச் சொந்தக்காரரானார். நேற்று வியாளனிரவு Powerball அதிஷ்டலாபச்சீட்டு ஒன்றை வாங்கிய அவர் அதில் division one prize pool இல் வெற்றி பெற்றதன் மூலமே ஒரே இரவில் $50 மில்லியன் டொலர்களை தனதாக்கியுள்ளார். தன்னை அடையாளம் காட்ட விரும்பாத அவர், தனது $50 million வெற்றியைக் கேள்விப்பட்டவுடன் நம்பமுடியாமல் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். தனது இந்த பரிசுப் பணத்தை தனது குடும்பத்தவர்கள், நண்பர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Read More »

ஐ.பி.எல். போட்டியை தவிர்க்க முன்னணி வீரர்களை பல வருட ஒப்பந்தத்திற்கு முயற்சி!

ஐ.பி.எல். தொடரை தவிர்ப்பதற்காக அவுஸ்ரேலிய வீரர்களை பல ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து வளைத்துப் போட அவுஸ்ரேலிய கிரிக்கெட் வாரியம் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் வாரியம் அந்நாட்டு வீரர்களுடன் வருடத்திற்கு ஒருமுறை ஒப்பந்தம் செய்கிறது. அந்த ஒரு வருடத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் அவுஸ்ரேலிய வீரர்களுக்கு ஓய்வு கிடைக்கும். அந்த ஓய்வில் அவர்கள் இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கிறார்கள். ஐ.பி.எல். தொடரில் அதிக அளவு பணம் கிடைப்பதால் அவர்கள் ஓய்வு எடுக்க விரும்புவதில்லை. இதனால் முன்னணி அல்லாத சில ...

Read More »

அவுஸ்ரேலியா குழு அடுத்த வாரம் வங்காள தேசம் செல்கிறது

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி வங்காள தேசம் சென்று விளையாடுவதற்கு முன்னோட்டமாக, அங்குள்ள பாதுகாப்பு குறித்து பார்வையிட பாதுகாப்புக்குழு அடுத்த வாரம் வங்காள தேசம் செல்கிறது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி வங்காள தேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதாக இருந்தது. அவுஸ்ரேலிய அணி வங்காள தேசத்திற்கு புறப்படும் நிலையில் பாதுகாப்பு காரணமாக வங்காள தேச தொடரை ரத்து செய்தது. வங்காள தேச கிரிக்கெட் வாரியத்தின் தீவிர முயற்சியின் காரணமாக வரும் ஆகஸ்ட்- செப்டம்பர் மாதத்தில் வங்காள சேதம் சென்று இரண்டு ...

Read More »

அவுஸ்ரேலியாவில் உலவும் போலியான 100 டொலர்

அவுஸ்ரேலியாவில் சீன வங்கிகள் தம் வங்கியாளருக்குப் பயிற்றுவிக்க, போலியான 100 டொலர் அவுஸ்திரேலிய நோட்டுகளைப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. குறத்த தாள்களின் நடுவில் “பயிற்றுவதற்கு மட்டும்” என்று சீன எழுத்தகளில் பொறிக்கப்பட்டிருக்கும். இவை eBay எனப்படும் இணைய வியாபார சந்தையில் விற்பனையாகி, அவுஸ்திரேலியாவின் மேற்கு மாநிலத்திற்கு வந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த நோட்டுக்கள் மதுபானம், சிகரெட் போன்றவை வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்தவகையான நோட்டுக்கள் கள்ள நோட்டுகள் இல்லை. என்றாலும் அவை போலியான நோட்டுகள் தான் என்று கூறப்படுகிறது. எது எப்படியிருப்பினும் இந்தவகையான நோட்டுக்கள் ...

Read More »

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்தவர்களுக்கு நிதி உதவிகள் ரத்து!

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்தவர்களுக்கு நிதி உதவிகள் ரத்தாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்தவர்கள் தங்களது விசா நிலைமை குறித்து அவ்வப்போது குடிவரவுத்துறையை அணுகாமல் இருப்பவர்களுக்கே Centre link நிதி உதவி, மற்றும் வீட்டுவாடகை உதவிகளை ரத்து செய்ய அவுஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. இதேவேளை இந்த நிதி உதவி ரத்து செய்யப்பட்டாலும், அவர்களுக்கான மருத்துவ உதவிகள் கிடைக்கும் என்று அரசு உறுதியளித்துள்ளது. இதன்மூலம் 2,000 க்கும் அதிகமான புகலிடம் கோருவோர் பாதிக்கப்படுவர் என்று கூறப்படுகிறது.

Read More »

கொலை முயற்சி- அவுஸ்ரேலியாவில் தேடப்படும் சிங்கப்பூரர்!

அவுஸ்ரேலிய  காவல் துறை, கொலை முயற்சியில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில், 30 வயது சிங்கப்பூரரைத் தேடி வருகின்றனர். 08 ஆம்திகதி இரவு பிரிஸ்பன் நகரில், பெயர் வெளியிடப்படாத அந்த நபர், 20-வயது சிங்கப்பூர் மாதை சுத்தியலால் தாக்கியதாகவும், பல முறை கத்தியால் குத்தியதாகவும் குவீன்ஸ்லந்துப் காவல் துறையிகர் கூறினர். மண்டையோட்டு எலும்பு பாதிக்கப்பட்ட நிலையில் அந்தப் பெண், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரின் உயிருக்கு ஆபத்தில்லை என்றும், அவர் சீரான உடல்நிலையில் இருப்பதாகவும் காவல்துறை கூறியுள்ளனர். மெலிந்த உடல்வாகு கொண்ட சந்தேக நபர், இரண்டு நாட்களுக்கு முன் பிரிஸ்பனுக்குச் ...

Read More »

வரவுசெலவுத் திட்டம் 2017/18 – குடிவரவு பற்றிய மாற்றங்கள்!

அவுஸ்ரேலிய வரவு செலவுத் திட்டத்தை, கருவூலக்காப்பாளர் Scot Morrison நேற்றிரவு (9) 7:30 மணிக்கு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். பெற்றோர்களுக்கான புதிய விசா அறிமுகம் – new temporary sponsored parent visa வருடத்துக்கு சுமார் 15,000 பேர் தலா $20,000 டொலர்கள் செலுத்தித் தமது பெற்றோர்களை new temporary sponsored parent visa திட்டத்தின் கீழ் இங்கு அழைத்துவந்து மூன்று தொடக்கம் ஐந்து வருடங்கள் வரை தம்முடன் தங்கவைக்கலாம். இதன்மூலம் அரசுக்கு $99 மில்லியன் டொலர்கள் வரை கிடைக்கவுள்ளது. ஆண்டுதோறும் 15000 விசாக்கள் வழங்கும் ...

Read More »

விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் பாகங்கள் மீட்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட, சிறீலங்கா விமானப்படையின் வை-8 ரக விமானத்தின் பாகங்கள் யாழ். ஆணையிறவு இயக்கச்சி பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட விமான பாகங்களானது, கடந்த 1992ஆம் ஆண்டு சுட்டுவீழ்த்தப்பட்ட பலாலி விமானப்படையினருக்குச் சொந்தமான விமானத்தின் பாகங்கள் என தெரிவிக்கப்படுகிறது. விமானப்படையினரின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், விமானப்படையினரின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விமானத்தின் பாகங்களையும் மீட்டுள்ளனர். சுமார் 25 வருடங்களின் பின்னர் குறித்த விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »