கொலை முயற்சி- அவுஸ்ரேலியாவில் தேடப்படும் சிங்கப்பூரர்!

அவுஸ்ரேலிய  காவல் துறை, கொலை முயற்சியில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில், 30 வயது சிங்கப்பூரரைத் தேடி வருகின்றனர்.

08 ஆம்திகதி இரவு பிரிஸ்பன் நகரில், பெயர் வெளியிடப்படாத அந்த நபர், 20-வயது சிங்கப்பூர் மாதை சுத்தியலால் தாக்கியதாகவும், பல முறை கத்தியால் குத்தியதாகவும் குவீன்ஸ்லந்துப் காவல் துறையிகர் கூறினர்.

மண்டையோட்டு எலும்பு பாதிக்கப்பட்ட நிலையில் அந்தப் பெண், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

அவரின் உயிருக்கு ஆபத்தில்லை என்றும், அவர் சீரான உடல்நிலையில் இருப்பதாகவும் காவல்துறை கூறியுள்ளனர்.

மெலிந்த உடல்வாகு கொண்ட சந்தேக நபர், இரண்டு நாட்களுக்கு முன் பிரிஸ்பனுக்குச் சென்றிருந்தார்.

ஆடவர் தங்கியிருந்த Airbnb வீட்டில் மாது அவரைச் சந்திக்க வந்தபோது தாக்குதல் நடந்தது.

அரைகால்சட்டையும் வெள்ளை டீ-சட்டையையும் அணிந்திருந்த சந்தேக நபர், பெண்ணின் முன்னாள் காதலர் என நம்பப்படுகிறது.

பொது மக்களுக்கு அவர் தீங்கு விளைவிக்கும் அபாயம் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் தம்முடன் எடுத்துவந்த பொருட்கள் அனைத்தும், சம்பவ இடத்தில் கைவிடப்பட்டுக் கிடந்தன.

ஆடவர் தமது கடப்பிதழ், பணப்பை இரண்டையும் விட்டுவிட்டு ஓடியுள்ளார். கண்காணிப்புக் கேமராக்களில் அவரது முகம் பதிவாகியுள்ளது.