ஐ.பி.எல். போட்டியை தவிர்க்க முன்னணி வீரர்களை பல வருட ஒப்பந்தத்திற்கு முயற்சி!

ஐ.பி.எல். தொடரை தவிர்ப்பதற்காக அவுஸ்ரேலிய வீரர்களை பல ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து வளைத்துப் போட அவுஸ்ரேலிய கிரிக்கெட் வாரியம் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

அவுஸ்ரேலிய கிரிக்கெட் வாரியம் அந்நாட்டு வீரர்களுடன் வருடத்திற்கு ஒருமுறை ஒப்பந்தம் செய்கிறது. அந்த ஒரு வருடத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் அவுஸ்ரேலிய வீரர்களுக்கு ஓய்வு கிடைக்கும். அந்த ஓய்வில் அவர்கள் இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கிறார்கள்.

ஐ.பி.எல். தொடரில் அதிக அளவு பணம் கிடைப்பதால் அவர்கள் ஓய்வு எடுக்க விரும்புவதில்லை. இதனால் முன்னணி அல்லாத சில நாடுகளின் கிரிக்கெட் அணிகளுடன் அவுஸ்ரேலியா விளையாடும்போது ஸ்மித், வார்னர் போன்ற வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படுகிறது. முக்கியமான தொடர்களில் விளையாடும்போது காயத்தால் அவதிப்படுகிறார்கள்.

இதனால் அவுஸ்ரேலிய கிரிக்கெட் வாரியம் கேப்டன் ஸ்மித், துணைக்கேப்டன் டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ் போன்ற வீரர்களுடன் பல வருடங்களுக்கு ஒப்பந்தம் போட விரும்புகிறது. ஆனால், வீரர்கள் அதற்கு விரும்பவில்லை எனத் தெரிகிறது.

ஐ.பி.எல். தொடரில் பங்கேற்காததற்காக அவர்களுக்கு கொடுக்கப்படும் ஊக்கத்தொகைதான் பல வருட ஒப்பந்தம் என்று அவுஸ்ரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியதாக கூறப்படுகிறது.

தற்போது ஸ்மித், வார்னர் போன்றோர் ஒரு வருடத்திற்கு ஐ.பி.எல். தொடர் மூலம் சுமார் 1 மில்லியன் டாலருக்கு மேல் சம்பாதிக்கிறார்கள. அடுத்த வருடம் இது அதிகரிக்கலாம். இதைவிட அதிக அளவில் பணம் கொடுத்தால்தான் அவுஸ்ரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு வெற்றிபெறும்.

தற்போது வார்னருக்கு 2 மில்லியன் டாலர் கொடுக்க ஆஸ்திரேலியா விரும்புகிறது. ஆனால் அடுத்த மூன்ற வருடங்களில் வார்னர் ஐ.பி.எல். மூலமாகவே சுமார் 10 மில்லியன் டாலர் சம்பாதித்துவிடுவார். இந்த அளவிற்கு வார்னருக்கு அவுஸ்ரேலிய கிரிக்கெட் வாரியம் பணம் கொடுக்குமா? என்பது கேள்விக்குறி.

இதற்கிடையே ஐ.பி.எல். தொடரில் அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்கள் விளையாடக்கூடாது என்ற கெட்ட நோக்கத்தில் எடுக்கப்படவில்லை. வீரர்கள் காயத்தை குறைப்பதற்காகவும், வீரர்களுக்கு ஓய்வு கொடுப்பதில் எழும் சர்ச்சை ஆகியவற்றை அடிப்படையில் கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.