அவுஸ்ரேலியாவில் சீன வங்கிகள் தம் வங்கியாளருக்குப் பயிற்றுவிக்க, போலியான 100 டொலர் அவுஸ்திரேலிய நோட்டுகளைப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறத்த தாள்களின் நடுவில் “பயிற்றுவதற்கு மட்டும்” என்று சீன எழுத்தகளில் பொறிக்கப்பட்டிருக்கும். இவை eBay எனப்படும் இணைய வியாபார சந்தையில் விற்பனையாகி, அவுஸ்திரேலியாவின் மேற்கு மாநிலத்திற்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த நோட்டுக்கள் மதுபானம், சிகரெட் போன்றவை வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்தவகையான நோட்டுக்கள் கள்ள நோட்டுகள் இல்லை.
என்றாலும் அவை போலியான நோட்டுகள் தான் என்று கூறப்படுகிறது. எது எப்படியிருப்பினும் இந்தவகையான நோட்டுக்கள் வியாபாரத்திற்கும் அதேவேளை பணமாற்றத்திற்கும் உகந்தது அல்ல என கூறப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal