சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்தவர்களுக்கு நிதி உதவிகள் ரத்து!

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்தவர்களுக்கு நிதி உதவிகள் ரத்தாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்தவர்கள் தங்களது விசா நிலைமை குறித்து அவ்வப்போது குடிவரவுத்துறையை அணுகாமல் இருப்பவர்களுக்கே Centre link நிதி உதவி, மற்றும் வீட்டுவாடகை உதவிகளை ரத்து செய்ய அவுஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.

இதேவேளை இந்த நிதி உதவி ரத்து செய்யப்பட்டாலும், அவர்களுக்கான மருத்துவ உதவிகள் கிடைக்கும் என்று அரசு உறுதியளித்துள்ளது. இதன்மூலம் 2,000 க்கும் அதிகமான புகலிடம் கோருவோர் பாதிக்கப்படுவர் என்று கூறப்படுகிறது.