செய்திமுரசு

மிதவைப் படகில் அலைக்கழிந்த நியூ­ஸி­லாந் பெண்!

மிதவைப் பட­கொன்றில்  கடலில்  சுமார்  இரு நாட்­க­ளாக அலைக்­க­ழிந்த  பெண் சுற்­றுலாப் பய­ணி­யொ­ருவர்  இனிப்­பு­களை உண்டு உயிர்­பி­ழைத்­தி­ருந்த நிலையில்  மீட்­கப்­பட்­டுள்ளார். நியூ­ஸி­லாந்தைச் சேர்ந்த குஷிலா ஸ்டெயின் என்ற 45 வயதுப் பெண்ணே கிரேக்கத் தீவான கிரெட்­டிற்கு அப்பால் ஏஜியன் கடலில் அலைக்­க­ழிந்து கொண்­டி­ருந்த பட­கி­லி­ருந்து  37 மணி நேரம் கழித்து மீட்­கப்­பட்­டுள்ளார். அவர் இதன்­போது தன்­னி­ட­மி­ருந்த லொலி என அழைக்­கப்­படும் வேக­வைத்த இனிப்பு தின்­பண்­டங்­களை உண்டும்   கடும் குளிரைத் தாங்­கிக்­கொள்­வ­தற்கு பிளாஸ்­டிக் விரிப்பால் உடலைப்  போர்த்­தி­யி­ருந்தும் உயிர் பிழைத்­தி­ருந்­துள்ளார். இந்­நி­லையில் தன்னை மீட்புப் பணி­யா­ளர்கள் ...

Read More »

அடுத்த வாரமளவில் நாட்டில் குண்டு வெடிக்கலாம்!

அடுத்த வாரங்களில் நாட்டில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று நடத்தப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து விசாரணை நடத்தும்படி தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவினால் இந்த முறைப்பாடு நேற்று புதன்கிழமை செய்யப்பட்டுள்ளது. மேலும், குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றை தேர்தல் நலனுக்காக மேற்கொள்ள சதி திட்டமொன்றை செய்து வருவதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

Read More »

பாகிஸ்தான், பயங்கரவாதத்தை தூண்டுகிறது – ஐ.நா.வில் இந்தியா

அரசியல் லாபத்துக்காக பெண்களின் குரலை பாகிஸ்தான் நசுக்குவதாகவும், அந்த நாடு பயங்கரவாதத்தை தூண்டுவதாகவும் ஐ.நா.வில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. காஷ்மீரில் இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை தொடர்ந்து ஐ.நா.வில் எழுப்பி வரும் பாகிஸ்தான், கடந்த 29-ந்திகதி பாதுகாப்பு கவுன்சிலிலும் இது தொடர்பாக குற்றம் சாட்டியது. குறிப்பாக காஷ்மீரின் தற்போதைய நிலவரம், அங்கு பெண்களின் நிலை என பல்வேறு அம்சங்கள் குறித்து பாகிஸ்தான் பிரதிநிதி மலீகா லோதி பேசினார். இதற்கு இந்தியா சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, அமைதி, பாதுகாப்பு மற்றும் பெண்கள் தொடர்பாக பாதுகாப்பு ...

Read More »

அமெரிக்க குடியுரிமையை கைவிட்டதை நிரூபிக்கும், ஆவணத்தை சமர்ப்பிக்க முடியுமா?

கோத்தபாய ராஜபக்ச தமது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டதை நிரூபிக்க, உரிய ஆவணத்தை சமர்ப்பிக்கமுடியுமா என்று அமைச்சர் மங்கள சமரவீர சவால் விடுத்துள்ளார். கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை கைவிட்டமைக்கான எவ்வித ஆவணங்களும் இல்லை என்று அவர் இன்று -06- கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், அமெரிக்க குடியுரிமையை கோத்தபாய ராஜபக்ச கைவிட்டமைக்கான சான்றிதழை, பொதுஜன பொரமுன கட்சியால் சமர்பிக்கமுடியுமா? என்று அவர் சவால் விடுத்தார். மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் உடன்படிக்கை தொடர்பான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இடம்பெற்ற ...

Read More »

இரு பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் சிறுபான்மைச் சமூகங்களும்!

இலங்கை தமிழரசு கட்சியிடமிருந்து கிடைத்திருக்கும் ஆதரவையடுத்து சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசாரத்துக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது.   சில தமிழ் அரசியல்வாதிகள் பரிந்துரைப்பதைப் போன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பு நடுநிலையாக இருந்துகொண்டு தமிழ் மக்கள் தாங்கள் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்கலாம் அல்லது தேர்தலில் பங்கேற்காமல் விலகியிருக்கலாம் என்று ஆலோசனை கூறக்கூடிய சாத்தியப்பாடு முனனர் இருந்தது. காணாமல்போனோரைக் கண்டறிவதிலும் குடிமக்களின் காணிகளை திருப்பிக்கையளிப்பதிலும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதை நோக்கி நகர்வதிலும் முன்னேற்றம் இல்லாதிருப்பது குறித்து தமிழச்சமூகம்  கடுமையாக கோபமடைந்திருக்கிறது.தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட ஐந்து ...

Read More »

காலநிலை மாற்றத்தினால் பாரிய நெருக்கடிகள் உருவாகலாம்!

காலநிலை நெருக்கடி காரணமாக மக்கள் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளக்கூடும் என 11,000விஞ்ஞானிகள் கூட்டாக எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர். பூமி  காலநிலைதொடர்பில் அவரசநிலையை எதிர்கொள்கின்றது என நாங்கள் தெளிவாகவும் எந்தவித சந்தேகமும் இன்றியும் தெரிவிக்கின்றோம் என 11,000 விஞ்ஞானிகள் அறிக்கையொன்றில் எச்சரித்துள்ளனர். பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நாங்கள் வாழும் முறையை மாற்றவேண்டும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதற்கு எங்கள் சர்வதேச சமூகம் செயற்படும் விதத்தில் பாரிய மாற்றங்கள் அவசியம் அவை இயற்கையை கையாளும் விதத்தில் மாற்றங்கள் அவசியம் என அவர்கள்  தெரிவித்துள்ளனர்.   இழப்பதற்கு நேரமில்லை ...

Read More »

வாக்களிக்கும்போது புர்கா, நிகாப்பை அகற்ற வேண்டும் !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் வாக்களிக்க வருகை தரும்போது புர்கா அல்லது நிகாப் அணியலாம் என தெரிவித்த தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க, வாக்களிப்பு நிலையத்துக்குள் நுழையும்போது அவற்றை அகற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார். புர்கா மற்றும் நிகாப் அணிவதை எங்களால் தடை செய்ய முடியாது, ஏனெனில் அது அவர்களின் கலாசாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பது அவர்களுக்கு ஒரு வாக்குச் சீட்டு வழங்கப்படுவதற்கு முன்பு அவர்களின் அடையாளத்தை சரிபார்க்க வேண்டும். வாக்களிக்கும்போது வாக்களார் ஒருவர் தனது அடையாளத்தை நிரூபிக்க ...

Read More »

மஹிந்த தரப்பிடம் தமிழருக்கு நீதியில்லை!

போரின் போதும், அதற்கு பின்­னரும்  வலிந்து நபர்­களை  காணா­ம­லாக்­கிய  மஹிந்த  தரப்­பி­ன­ரிடம்  தமிழ் மக்கள்  ஒரு­போதும் நீதியை  எதிர்­பார்க்க முடி­யாது.  காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் உற­வுகள் அர­சாங்­கத்­திடம் இருந்து  நிவா­ர­ணத்­தினை  எதிர்­பார்க்­க­வில்லை மாறாக  உண்­மை­யான தீர்­வி­னையே எதிர்­பார்க்­கின்­றார்கள் என்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  நளிந்த ஜய­திஸ்ஸ தெரி­வித்தார். இது குறித்து அவர்  மேலும் குறிப்­பி­டு­கையில், யுத்த  காலத்தில்  காணாமல் போனோரை எவ்­வாறு கொண்டு வரு­வது என்று பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ குறிப்­பிட்­டுள்­ளமை காணா­ம­லாக்­கப்­பட்­டுள்­ளோ­ரது உற­வி­னர்­க­ளது எதிர்­பார்ப்­பினை  அவ­ம­திப்­ப­தா­கவே  கரு­தப்­படும்.  யுத்த ...

Read More »

இலங்கை வன்முறையை எதிர்கொள்ள தயாராகின்றது!

பிலிப்ஸ்சேர்வெல் தி டைம்ஸ்- யுகே தமிழில் ரஜீபன் இலங்கை ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்டுள்ள இந்த தருணத்தில் கொழும்பின் புறநகர் பகுதியில் கடந்த வாரம் ஆதரவாளர்கள் கோத்தபாய ராஜபக்சவை உற்சாகத்துடன்  வரவேற்றனர், கோத்தாபய ராஜபக்சவின் பெயர் வாக்குசீட்டில் உள்ள அதேவேளை பிரச்சாரத்தில் இன்னொரு ராஜபக்ச ஆதிக்கம் செலுத்துகின்றார். கோத்தாபய ராஜபக்சவின் சகோதரர் மகிந்த நாட்டை மிகவும் சர்ச்சைக்குரிய விதத்தில் ஒரு தசாப்த காலமாக ஆட்சி செய்த பின்னர் நான்கு வருடத்திற்கு முன்னர் அதிர்ச்சி தோல்வியை தழுவினார். தற்போது ராஜபக்சாக்கள்  மீள் எழுச்சி பெறும் நிலையில் உள்ளனர். ...

Read More »

பூனைக் குட்டிகளை கைவிட்டுச் சென்ற ஜோடியை தேடும் அவுஸ்திரேலிய காவல் துறை!

அவுஸ்திரேலியா நாட்டில் தென்பகுதியிலுள்ள அடிலேய்ட் நகரத்திலுள்ள கடைத்தொகுதி ஒன்றில் பூனை குட்டிகளை கைவிட்டு சென்ற தம்பதிகளை காவல் துறை தேடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தினத்தன்று இரண்டு  பூனை குட்டிகளை தம்பதியினர் கடைத்தொகுதி ஒன்றில் கைவிட்டு செல்லும் காட்சி சிசிரிவி  கமராவில் பதிவாகியுள்ளது. பூனையை கண்ட துப்புரவு பணியில்  ஈடுபட்டிருந்த ஊழியர்  பாதுகாப்பு ஊழியர்களுக்கு தகவலை தெரிவித்து அவற்றை பத்திரமாக மீட்டு காவல் துறைக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்நிலையில், குறித்த சிசிரிவி காணொளியியை வைத்து குறித்த தம்பதிகளை காவல் துறையினர்   தேடி வருகின்றனர். இரண்டு பூனைக்குட்டிகளும் ஆண் ...

Read More »