காஷ்மீர் எல்லையில் இந்தியா ஆயுதங்களை சேர்த்து வருகின்றது என ஐக்கிய நாடுகள் சபையிடம் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகது குரேஷி தெரிவித்துள்ளார். கடந்து காலங்களில் இந்தியாவுக்கு எதிராக அவர் 6 தடவை ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட்டுள்ளார். இந்தியா பல்வேறு ஏவுகணைகளை பரிசோதித்து, அவற்றை எல்லைப் பகுதியில் குவித்து வருகின்றது எனவும் , பாகிஸ்தான் மீது இந்திய அரசு தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்புள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இவ் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் கவுன்சில் தலையிட்டு உரிய நடவடிக்கை ...
Read More »செய்திமுரசு
அவுஸ்திரேலிய காட்டுத்தீயில் தீயணைப்பு வீரர்கள் இருவர் பலி!
அவுஸ்திரேலியாவில் சிட்னி காட்டுத்தீயை (bushfires) அணைக்க போராடி வரும் இரண்டு தீயணைப்பு வீரர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா கிழக்கு பகுதிகளில் பல வாரங்களாக காட்டுத்தீயை எதிர்த்துப் போராடி வருகிறது, இதனால் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளார்கள், மற்றும் 700 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, கிட்டத்தட்ட 1.2 மில்லியன் ஹெக்டேர் நிலம் (3 மில்லியன் ஏக்கர்) அழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான சிட்னியில் காட்டுத்தீ விபத்து ஏற்பட்டபோது, தீயணைப்பு வீரர்களின் லொரி ஒரு மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், சாரதியும் தியணைப்பு விரரும் ...
Read More »ஒற்றுமையின் அவசியம் !
தமிழ் மக்களின் ஏகோபித்த அர சியல் தலைமையாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விளங் கிய போதிலும், கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய தமி ழரசுக் கட்சி அதன் பங்காளிக் கட்சிகளுடன் சம அந்தஸ்தும், சம உரிமையும் கொண்டதாகச் செயற்படவில்லை. தமிழரசுக் கட் சியின் வளர்ச்சியிலும், மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதிலுமே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை தீவிர கவனம் செலுத்தியிருந்தது. நீண்ட வரலாற்றைக் கொண்ட தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் ஒரு முக்கியமான கால கட்டத்தை வந்தடைந்திருக்கின்றது. தமிழ் அரசியல் சக்திகள் அனைத்தும் ...
Read More »உலகில் முதல் தடவையாக கறுப்பினப் பெண்கள் வசமாகிய ஐந்து அழகிப் பட்டங்கள்!
வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு ஐந்து அழகிப் பட்டங்கள் கறுப்பினப் பெண்கள் வசமாகியுள்ளது. மிஸ் யுஎஸ்ஏ, மிஸ் டீன் யுஎஸ்ஏ, மிஸ் அமெரிக்கா, மிஸ் யுனிவர்ஸ் மற்றும் மிஸ் வேர்ல்ட் என 2019 ஆம் ஆண்டின் அழகிப் பட்டங்களை வாங்கிக் குவித்திருக்கிறார்கள் கறுப்பின அழகிகள். கடந்த சனிக்கிழமை (14.12.2019), லண்டனிலுள்ள கண்காட்சி மையத்தில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் மிஸ் ஜமைக்கா, டோனி ஆன் சிங் 69 ஆவது உலக அழகியாக முடிசூட்டப்பட்டார். மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்ற நான்காவது ஜமைக்கா அழகி ...
Read More »அவுஸ்திரேலியாவில் அவசரகால நிலை பிரகடனம்!
அவுஸ்திரேலியா – நியூ சவுத் வேல்ஸில் ஒரு வாரத்திற்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. குறித்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் வெப்ப சூழல் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து இதன் நெருக்கடியை தவிர்க்கும் பொருட்டு இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று குறித்த பகுதியில் வெப்பநிலை சராசரியாக அதிகபட்சம் 40.9 சி வரை காணப்பட்டது. ஆனால் இதனைவிட இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு வெப்பம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 7 நாட்களுக்கு குறித்த ...
Read More »மன்னார் அருட்தந்தை காவல் துறையால் தாக்கப்பட்ட சம்பவம் – மறைமாவட்ட பொது நிலையினர் பேரவை கண்டனம்
மன்னார் மறைசாட்சியர் இராக்கினி திருத்தலப் பகுதியில் அதன் பரிபாலகரும் பங்குத்தந்தையுமான அருட்தந்தை. அலெக்சாண்டர் சில்வா (பெனோ) அடிகளார் மன்னார் காவல் துறை நிலைய காவல் துறை உத்தியோகத்தரால் தாக்கப்பட்டதும், அவமதித்து நடத்த எத்தனித்ததையும் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க சமுகம் வன்மையாக கண்டிக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் மறைமாவட்டப் பொது நிலையினர் பேரவையின் பொதுச் செயலாளர் எஸ்.சதீஸ் கண்டன அறிக்கை ஒன்றை இன்று (19) விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், குறித்த பகுதியில் திட்டமிட்ட வகையில் மண் அகழ்வு நடை பெறுவதாகவும், அதனால் ...
Read More »சென்னை தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் !
சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, அங்கு மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் ஆட்சியாளர்களை விமர்சித்தும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பலர் கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர். இந்நிலையில், சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஒரு மர்ம நபர், ‘முதல்வர், துணை முதல்வர் மற்றும் தலைமைச் செயலகம் ஆகிய இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும்’ என மிரட்டல் ...
Read More »சஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்றதாகக் கைதுசெய்யப்பட்ட 64பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீக் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாகச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான் குடியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். 26.9.2019-அன்று -மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது ஒக்டோபர் 10ஆம் திகதி ...
Read More »இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்!
தமிழகத்தில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு எனத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க தி.மு.க.விற்கு மனமே வரவில்லை. மக்களைச் சந்திக்கும் எண்ணமே இல்லை. தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை மிரட்டும் விதமாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். ஏதாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து நீதிமன்றம் சென்று வருகிறார்கள். மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த, மற்றவர்கள் எழுதிக் கொடுத்ததை ...
Read More »நாமல் குமாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
ஊழல் எதிர்ப்பு படையணியின் நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் நாமல் குமாரவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹெட்டிபொல நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வட மேல் மாகாணத்தில் குருணாகல் மாவட்டம், குளியாப்பிட்டி மற்றும் நிக்கவரட்டிய பகுதிகளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து முஸ்லிம் கிராமங்களை இலக்குவைத்து திட்டமிட்ட குழுவொன்று முன்னெடுத்த தொடர் தாக்குதல்கள் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More »