காஷ்மீர் எல்லையில் இந்தியா ஆயுதங்களை சேர்த்து வருகின்றது என ஐக்கிய நாடுகள் சபையிடம் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகது குரேஷி தெரிவித்துள்ளார்.
கடந்து காலங்களில் இந்தியாவுக்கு எதிராக அவர் 6 தடவை ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட்டுள்ளார்.
இந்தியா பல்வேறு ஏவுகணைகளை பரிசோதித்து, அவற்றை எல்லைப் பகுதியில் குவித்து வருகின்றது எனவும் , பாகிஸ்தான் மீது இந்திய அரசு தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்புள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இவ் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் கவுன்சில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெ அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தெற்காசியாவானது தற்போது பதற்றமான சூழலில் இருக்கிறது இந்நிலையில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தி பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்ய வாய்ப்புள்ளது.
எனவே ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு இதனை தடுத்து நிறுத்துமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.