52 இடங்களில் தாக்குதல் நடத்துவோம் எனக்கூறிய அமெரிக்காவிற்கு 290 என்ற எண்ணும் நினைவிருக்க வேண்டும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி எச்சரித்துள்ளார். ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்தது. சுலைமானி கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவை பழிவாங்குவோம் என ஈரான் நாட்டின் ...
Read More »செய்திமுரசு
ஆஸி. காட்டுத் தீயால் உண்டான சேத விபரங்களை சீரமைக்க 2 பில்லியன் ஆஸி.டொலர்கள்!
காட்டுத் தீயினால் உண்டான சேத விபரங்களை சீரமைப்பதற்கு அடுத்த இரு ஆண்டுகளில் 2 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் ஒதுக்கப்படவுள்ளதாக அந் நாட்டு பிரதமர் ஸ்கொட் மோரிசன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் முடிவடைவதற்குள் 500 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களையும், 2021 ஆம் ஆண்டு 1 பில்லியன் அவுஸதிரேலிய டொலர்களையும், 2022 ஆம் ஆண்டு மேலும் 500 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களையும் ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். இந் நிலையில் ...
Read More »சிதறுமா தமிழ் வாக்குகள் ?
பொதுத்தேர்தலை நோக்கி நாடு நகரத் தொடங்கியுள்ள சூழலில் தமிழ் அரசியல் கட்சிகளும் அதற்கான தயார்படுத்தல்களில் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. இந்தப் பொதுத்தேர்தலில் ஆளும்கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்வதை தடுக்கும் வகையில்- தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட முன்வர வேண்டும் என்று, அழைப்பு விடுத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமது பங்காளிக் கட்சிகளுடன் ஏற்கனவே ஆசனப் பங்கீட்டுப் பேச்சுக்களைத் தொடங்கி விட்டது. புதிய கட்சிகளை உள்வாங்குவதற்கான எந்தப் பேச்சுக்களையும் முன்னெடுக்காமலேயே, பங்காளிகளுடன் ஆசனப் பங்கீட்டுப் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதில் இருந்தே, கூட்டமைப்பு ஏனைய தமிழ்க் ...
Read More »அரசியலமைப்பு திருத்தத்தினூடாக வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு !
வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு சிறந்த அரசியல் தீர்வொன்றை பெற்றுக் கொள்ளும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வர வேண்டியது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் ஜனாதிபதி அதற்கு தமது அவதானத்தை செலுத்தியதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடர் கடந்த 3ம் திகதி ...
Read More »”எனது பணி மக்களை அடியொற்றி இருக்கும்”!-ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்
நான் அதிகாரங்களை ஏதேச்சதிகாரமாக பயன்படுத்துவதற்காகவோ, அதிகார துஷ்பிரயோகங்களை மேற்கொள்வதற்காகவோ ஆளுநர் பதவியைப் பெறவில்லை. மாகாண நிர்வாகத்துக்கான எல்லையை நான் நன்கு அறிந்து வைத்துள்ளேன். எனது பணிகள் அனைத்தும் மக்களை அடியொற்றியதாக இருக்கையில், அதிகார துஷ்பிரயோகங்களோ வரம்பு மீறல்களோ இடம்பெறுவதற்கு சாத்தியமில்லை என்று வடமாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:-அரச நிர்வாகத்துறையில் நீண்ட அனுபவத்தினைக் கொண்ட நீங்கள் சேவையிலிருக்கும்போதே வடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? பதில்:- அரசாங்க ...
Read More »இந்தோனேசியாவில் மலர்ந்துள்ள உலகின் மிகப்பெரிய மலர்!
உலகின் மிகப்பெரிய மலரான ராஃப்லீசியா இந்தோனேஷியாவின் மேற்கு சுமத்ரான் காட்டில் மலர்ந்துள்ளது. 117 சென்றி மிற்றர் விட்டம் கொண்ட இந்த மலர் இதுவரை மலர்ந்த ராஃப்லீசியா மலர்களிலேயே மிகப்பெரிய மலர் என மேற்கு சுமத்ராவில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் இதே பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ரஃப்லீசியா மலர் 107 சென்றி மிற்றர் விட்டம் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த மலரின் ஒட்டுண்ணி பண்பு, விகாரமான தோற்றம் மற்றும் துர்நாற்றத்தின் காரணமாக “அசுரன் மலர்” , “சடலம் ...
Read More »ஆஸ்திரேலிய காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!
ஆஸ்திரேலிய காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்து உள்ளது.ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இதனால் எழுந்துள்ள புகையால் ஆஸ்திரேலிய நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். . காட்டுத்தீயை கட்டுப்படுத்த 3000 துணை ராணுவப் படையை உதவிக்கு அழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கங்காரு தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர்பலியாகி உள்ளனர். இதை தொடர்ந்து தீவிபத்தால் பலி எண்ணிக்கை 23யை ...
Read More »இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள பூஜித்த, ஹேமசிறி!
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். கடந்த நீதிமன்ற விசாரணையின்போது கொழும்பு மேலதிக நீதிவான் இவர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறித்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழே இவர்களுக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
Read More »லிபியாவில் இராணுவ பாடசாலை மீது தாக்குதல் : 28 பேர் உயிரிழப்பு!
லிபிய நாட்டின் தலைநகரில் உள்ள இராணுவ பாடசாலை மீது மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் சுமார் 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு ஆயதக் குழுக்குள் பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு கடந்த 2011 ஆம் ஆண்டு சர்வாதிகாரி கடாபி கொல்லப்பட்டதன் பின் உள்ளநாட்டு போர் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் அரசுப்படை வசம் உள்ள தலைநகர் திரிபோலியை கைப்பற்றுவதற்காக பல்வேறு தாக்குதல்களை நடாத்தி வருகின்றனர். இதில் அதிகளவிலான ...
Read More »ஏனைய பகுதிகளில் போட்டியிடுவது குறித்து இறுதி முடிவில்லை!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றதே தவிரவும் தற்போது வரையில் இறுதிமுடிவொன்றை எட்டவில்லை என்று அதன் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடக்கு கிழக்கிற்கு வெளியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வரும் நிலையில் அதுகுறித்த அடுத்தகட்ட நிலைமைகள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வடக்கு கிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவது குறித்து கடந்த காலங்களிலேயே ...
Read More »