ஆஸி. காட்டுத் தீயால் உண்டான சேத விபரங்களை சீரமைக்க 2 பில்லியன் ஆஸி.டொலர்கள்!

காட்டுத் தீயினால் உண்டான சேத விபரங்களை சீரமைப்பதற்கு அடுத்த இரு ஆண்டுகளில் 2 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் ஒதுக்கப்படவுள்ளதாக அந் நாட்டு பிரதமர் ஸ்கொட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் முடிவடைவதற்குள் 500 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களையும், 2021 ஆம் ஆண்டு 1 பில்லியன் அவுஸதிரேலிய டொலர்களையும், 2022 ஆம் ஆண்டு மேலும் 500 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களையும் ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந் நிலையில் இதற்கு அதிகமாக மேலும் நிதி தேவைப்பட்டால் அதனை வழங்குவதற்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.