லிபிய நாட்டின் தலைநகரில் உள்ள இராணுவ பாடசாலை மீது மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் சுமார் 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு ஆயதக் குழுக்குள் பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தோடு கடந்த 2011 ஆம் ஆண்டு சர்வாதிகாரி கடாபி கொல்லப்பட்டதன் பின் உள்ளநாட்டு போர் தீவிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில் கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் அரசுப்படை வசம் உள்ள தலைநகர் திரிபோலியை கைப்பற்றுவதற்காக பல்வேறு தாக்குதல்களை நடாத்தி வருகின்றனர்.
இதில் அதிகளவிலான பொது மக்கள் உயிரிழந்துள்ளதோடு , ஆயிரக்கணக்கான மக்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்நிலையிலேயே லிபியாவின் தலைநகரான திரிபோலியின் காட்ரா பகுதியில் அமைந்துள்ள இராணுவ பாடசாலை மீது நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத் தாக்குதலில் இராணுவ பாடசாலையில் உள்ள 28 பேர் உயிரிழந்ததோடு , 12 பேர் வைர படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal