இந்தோனேசியாவில் மலர்ந்துள்ள உலகின் மிகப்பெரிய மலர்!

உலகின் மிகப்பெரிய மலரான ராஃப்லீசியா இந்தோனேஷியாவின் மேற்கு சுமத்ரான் காட்டில் மலர்ந்துள்ளது.

 

117 சென்றி மிற்றர் விட்டம் கொண்ட இந்த மலர் இதுவரை மலர்ந்த ராஃப்லீசியா மலர்களிலேயே மிகப்பெரிய மலர் என மேற்கு சுமத்ராவில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

2017 ஆம்  ஆண்டில் இதே பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ரஃப்லீசியா மலர் 107 சென்றி மிற்றர் விட்டம் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த மலரின்  ஒட்டுண்ணி பண்பு, விகாரமான தோற்றம் மற்றும் துர்நாற்றத்தின் காரணமாக “அசுரன் மலர்” , “சடலம் மலர்” என்றும் இந்தோனேசிய மொழியில் குறிப்பிடப்படுகின்றது.

உலகின் மிகப்பெரிய மலராக இருந்த போதும் ஏழு நாட்கள் மட்டுமே இதன் வாழ்நாள் இருக்கும். ரஃப்லீசியா மலரை 19 ஆம் நூற்றாண்டினை சேர்ந்த பிரிட்டீஸ் காலனித்துவ அதிகாரி ஸ்டம்போர்ட் ரஃப்லீஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.