செய்திமுரசு

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சிறிலங்கா வருகை!

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோப் எதிர்வரும் 13 ஆம், 14 ஆம் திகதிகளில் சிறிலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின்போது அவர், சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றி கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை சீன வெளிவிவகார அமைச்சரும் சிறிலங்கா வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

அடுத்த வாரம் சிறிலங்கா வரும் அலிஸ் வெல்ஸ்!

அமெரிக்காவின், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் எதிர்வரும் 13 – 22 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனவரி 13 – 14 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் அவர் கொழும்பில் தங்கியிருந்த உயர் அரசாங்க அதிகாரிகளையும், சிவில் சமூகத்தின் உறுப்பினர்களையும் சந்தித்து, இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடவுள்ளார். அதன் பின்னர் அலிஸ் வெல்ஸ் 15-18 ஆம் திகதி ...

Read More »

தென்னாபிரிக்க விமானம் விபத்து!

தென்னாபிரிக்க விமானப் படைக்கு சொந்தமான விமானம் ஒன்று கொங்கா குடியரசில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ளது. கொங்கோ குடியரசில் கோமா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, விமானத்தின் இடப்பக்க இயந்திரம் ஒன்று தீப் பிடித்ததன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது எனினும் விரைந்து செயற்பட்ட விமான நிலையத்தின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையினால் பாரிய சேத விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. விமானம் விபத்துக்குள்ளானபோது 59 பயணி ஐ.நா.வின் படையணியைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்களும் இருந்துள்ளனர்.

Read More »

ஆஸி. தீயணைப்பு வீரர் உயிரிழப்பு! குழந்தைக்கு பதக்கம் சூட்டும் நிகழ்வு!

அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த போராடிய தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தத்தையடுத்து, அவரது 20 மாதம் நிரம்பிய மகளுக்கு தந்தையின் துணிச்சலுக்காக பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. ‘O’Dwyer’ என்ற 36 வயதான அவுஸ்திரேலியாவின் தீயணைப்பு படை வீரர் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி அன்று காட்டுத் தீயை அணைப்பதற்காக போராடியபோது மரம் விழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்தார். இந்த நிலையில் O’Dwyer’ இன் உயிர்த் தியாகத்தை கெளரவப்படுத்தும் வகையில், அவரது இறுதி நிகழ்வில் O’Dwyer’ இன் 20 மாதம் நிரம்பிய மகளுக்கு உயரிய கெளரவ ...

Read More »

அவுஸ்­தி­ரே­லிய காட்டுத் தீ- 10,000 ஒட்­ட­கங்­களை கொல்­வ­தற்கு உத்­த­ரவு!

அவுஸ்­தி­ரே­லி­யாவில் நிலவும் கடும் வெப்­ப­நிலை கார­ண­மாக காட்டுத் தீ வேக­மாகப் பரவி வரு­கின்ற நிலையில் முழு நாடுமே திண்­டாட்­டத்தை எதிர்­கொண்­டுள்ளது. இந்­நி­லையில்  அந்­நாட்­டி­லுள்ள ஒட்­ட­கங்கள் வரட்­சியால் பாதிக்கப்­பட்ட பிராந்­தி­யங்­களில் அதி­க­ளவு நீரை அருந்­து­வதைத் தடுத்து நிறுத்த அங்­குள்ள 10,000 க்கு மேற்­பட்ட ஒட்­ட­கங்­களைக் கொல்லும் நட­வ­டி­க்கை இன்று புதன்­கி­ழமை முதல் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. அனன்கு பிட்­ஜன்ட்­ஜட்­ஜாரா யன்­கு­னிட்­ஜட்­ஜாரா பிராந்­தி­யத்தைச் சேர்ந்த உள்ளூர் தலை­வர்கள் ஒட்­ட­கங்­களைக் கொல்­வ­தற்­கான இந்த உத்­த­ரவை பிறப்­பித்­துள்னர். இதற்­காக உலங்­கு­வா­னூர்­தி­களில்  உத்­தி­யோ­க­பூர்­வ­மாக  துப்­பாக்கிச் சூட்டை நடத்­து­ப­வர்களை அனுப்ப ...

Read More »

காலத்தின் கட்டாயம்…

மாகாண சபை­க­ளுக்கு பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கினால் அது பொலிஸ் பணி­களை அர­சியல் மய­மாக்­கு­வ­தற்கு வழி­வ­குக்கும் என அவர் கருத்து வெளி­யிட்­டுள்ளார். ஆனால் மொழிப்­பி­ரச்­சினை கார­ண­மாக வடக்கு–கிழக்கு தமிழ்ப்­பி­ர­தே­சங்­களில் பொலி­ஸா­ருக்கும் பொது­மக்­க­ளுக்கும் இடையில் ஏற்­ப­டு­கின்ற முரண்­பா­டு­களும் முறுகல் நிலை­மை­க­ளுமே பல்­வேறு வன்­மு­றை­க­ளுக்கு கடந்த காலங்­களில் வித்­திட்­டி­ருந்­தன என்­பதை கவ­னத்திற்கொள்ள வேண்டும். ஜனா­தி­பதி கோத்­தபாய ராஜ­பக்ஷவின் கொள்கை விளக்க உரை தமிழ் அர­சி­ய­லையும் தமிழ் மக்­க­ளையும் கையறு நிலை­மைக்குள் தள்­ளி­யுள்­ளது. தனி ஒரு சமூ­கத்தின் பெரும்­பான்மை பலத்தின் மூலம் ஆட்சி அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றி­யுள்ள அவர் பெரும்­பான்மை இன ...

Read More »

பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறும் இளவரசர் ஹரி தம்பதி

பிரிட்டன் நாட்டின் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அவர்களின் இந்த முடிவு பிரிட்டனில் பெரிய பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் குழந்தை ஆர்ச்சியை வளர்ப்பதில் ஐக்கிய இராச்சியத்திற்கும் வட அமெரிக்காவிற்கும் இடையில் தங்கள் நேரத்தை செலவு செய்ய போகிறார்களாம். அதேபோல் இவர்கள் சொந்தமாக வேலை பார்த்து உழைக்க உள்ளனர். பரம்பரை சொத்து வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர். சொந்தமாக பொருளாதார ரீதியாக வாழ்க்கையில் நிறைவு பெற வேண்டும் என்று இவர்கள் கூறியுள்ளனர். பிரிட்டன் ...

Read More »

புலியின் படத்தை வரைந்த இளைஞர்களை அச்சுறுத்திய புலனாய்வு பிரிவு!

யாழ்.வல்வெட்டித்துறையில் சுவரோவியமாக புலியின் படத்தை வரைந்த இளைஞர்களை புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களும் காவல் துறையினரும் அச்சுறுத்தியதுடன் , கீறிய புலிப்படத்தையும் அழிக்க வைத்துள்ளனர். நாட்டின் பல பாகங்களிலும் சுவரோவியங்களை இளையோர் கீறி வருகின்றனர். அதற்கு பல தரப்பினரும் ஆதரவு நல்கி வருவதுடன் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்நிலையில் வல்வெட்டித்துறை வேம்படி பகுதியில் நேற்று புதன்கிழமை அப்பகுதி இளையோர் ஒன்றிணைந்து புலி ஒன்றின் படத்தினை சுவரோவியமாக வரைய முனைந்துள்ளனர். புலியின் படத்தினை வரைந்து கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு காவல் துறையுடன் வந்த புலனாய்வு பிரிவினர் புலிப்படம் ...

Read More »

நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்கள் சிந்தித்து செயற்படுவார்கள்!

நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்கள் சிந்தித்து செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கின்றது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டபோது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபச்சவின் அரசாங்கத்தில் இருந்தவர்களை கைது செய்திருந்தால் தற்போதைய அரசாங்கம் ஐக்கியதேசியக் கட்சி உறுப்பினர்களை கைது செய்திருக்கமாட்டார்கள். ரணில் விக்கிரமசிங்க கைது செய்யாது அங்கும் இங்குமாக டீல் போட்டதால் தான் இன்று கைதுகள் இடம்பெறுகின்றது. இன்றைய அரசாங்கத்தில் நாடகங்கள் அரங்கேறுகின்றன தென்னிலங்கை மக்கள் ...

Read More »

அவுஸ்திரேலியா காட்டுத் தீ : பசுபிக் கடல் முழுவதும் புகை மண்டலம்

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இருந்து வரும் புகை பசுபிக் முழுவதம் பரவியுள்ள நிலையில் தென் அமெரிக்காவை நோக்கி நகர்வதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச வானிலை அறிவிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.   அத்துடன் இந்த புகை மண்டலம் அந்தார்டிக்காவை அடைந்திருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அவுஸ்திரேலிய தீ விபத்து தொடர்பான நாசாவின் செய்மதி தகவல்களை பயன்படுத்தி அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய முப்பரிமாண புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினால் அவுஸ்திரேலியாவின் 10.3 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. அத்துடன் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் ...

Read More »