அவுஸ்திரேலியாவில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக காட்டுத் தீ வேகமாகப் பரவி வருகின்ற நிலையில் முழு நாடுமே திண்டாட்டத்தை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில் அந்நாட்டிலுள்ள ஒட்டகங்கள் வரட்சியால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் அதிகளவு நீரை அருந்துவதைத் தடுத்து நிறுத்த அங்குள்ள 10,000 க்கு மேற்பட்ட ஒட்டகங்களைக் கொல்லும் நடவடிக்கை இன்று புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அனன்கு பிட்ஜன்ட்ஜட்ஜாரா யன்குனிட்ஜட்ஜாரா பிராந்தியத்தைச் சேர்ந்த உள்ளூர் தலைவர்கள் ஒட்டகங்களைக் கொல்வதற்கான இந்த உத்தரவை பிறப்பித்துள்னர்.
இதற்காக உலங்குவானூர்திகளில் உத்தியோகபூர்வமாக துப்பாக்கிச் சூட்டை நடத்துபவர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒட்டகங்களைக் கொல்லும் இந்த நடவ டிக்கை சுமார் 5 தினங்களுக்கு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.