ஆஸி. தீயணைப்பு வீரர் உயிரிழப்பு! குழந்தைக்கு பதக்கம் சூட்டும் நிகழ்வு!

அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த போராடிய தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தத்தையடுத்து, அவரது 20 மாதம் நிரம்பிய மகளுக்கு தந்தையின் துணிச்சலுக்காக பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

‘O’Dwyer’ என்ற 36 வயதான அவுஸ்திரேலியாவின் தீயணைப்பு படை வீரர் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி அன்று காட்டுத் தீயை அணைப்பதற்காக போராடியபோது மரம் விழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் O’Dwyer’ இன் உயிர்த் தியாகத்தை கெளரவப்படுத்தும் வகையில், அவரது இறுதி நிகழ்வில் O’Dwyer’ இன் 20 மாதம் நிரம்பிய மகளுக்கு உயரிய கெளரவ பதக்கம் அணிவித்து அவுஸ்திரேலிய தீயணைப்பு பிரிவினர் பெருமைப்படுத்தியது.

 

தனது தந்தையின் இழப்பை அறியாத, அந்த குழந்தை தீயணைப்புத் துறை தலைமை அதிகாரியிடமிருந்து பதக்கத்தைப் பெற்ற காட்சி இறுதிச் சடங்கில் இருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது.

அத்துடன் தந்தையின் சடலம் வைக்கப்பட்டிருந்த சவப் பெட்டிக்கு அருகில் அவர் குறும்புத் தனமாக படுத்து உறங்குவதும், தந்தையின் தலைக் கவசத்தை அணிந்து அந்த இடத்தில் வலம் வரும் காட்சி பார்ப்பவர்களின் மனதை சோகத்தால் நிலைகுலைய வைத்துள்ளது.

இச் சடங்கில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.

இதேவேளை இந்த சம்பவத்தைப் ஒத்த மேலும் ஒரு சம்பவமும் அண்மையில் நடைபெற்றது. இதே விபத்தில் சிக்குண்ட ஜெஃப்ரி கிட்டன் என்ற 32 வயதான மேலும் அவுஸ்திரேலியா தீயணைப்பு படை வீரர் ஒருவரின் இறுதிச் சடங்கிலும், அவரது 18 மாதம் நிரம்பிய மகனுக்கு பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்ட நிகழ்வும் பார்ப்பவர்களை கண் கலங்க வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.