பிரிட்டன் நாட்டின் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் இந்த முடிவு பிரிட்டனில் பெரிய பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் குழந்தை ஆர்ச்சியை வளர்ப்பதில் ஐக்கிய இராச்சியத்திற்கும் வட அமெரிக்காவிற்கும் இடையில் தங்கள் நேரத்தை செலவு செய்ய போகிறார்களாம்.
அதேபோல் இவர்கள் சொந்தமாக வேலை பார்த்து உழைக்க உள்ளனர். பரம்பரை சொத்து வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர். சொந்தமாக பொருளாதார ரீதியாக வாழ்க்கையில் நிறைவு பெற வேண்டும் என்று இவர்கள் கூறியுள்ளனர்.
பிரிட்டன் அரசுக்கும், ராணிக்கும் ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்வோம். ஆனால் அரசுடன் நெருக்கம் காட்ட மாட்டோம். பல நாட்களாக இதை யோசித்தோம். நிறைய விவாதித்து இந்த முடிவை அறிவித்து இருக்கிறோம்.
கொஞ்சம் மக்களுக்காக நேரடியாக பணியாற்றும் எண்ணமும் எங்களுக்கு இருக்கிறது. புது வருடத்தில் மிக முக்கியமான முடிவை எடுத்து இருக்கிறோம், என்று ஹரி குறிப்பிட்டுள்ளார்.