அமெரிக்காவின், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் எதிர்வரும் 13 – 22 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனவரி 13 – 14 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் அவர் கொழும்பில் தங்கியிருந்த உயர் அரசாங்க அதிகாரிகளையும், சிவில் சமூகத்தின் உறுப்பினர்களையும் சந்தித்து, இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.
அதன் பின்னர் அலிஸ் வெல்ஸ் 15-18 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் இந்தியாவில் தங்கியிருந்து டில்லி, சைசினா கலந்துரையாடலிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
இறுதியாக அலிஸ் வெல்ஸ் 19-22 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் பாகிஸ்தானின் இஸ்லாமபாத்துக்கு பயணம் செய்து, அங்கு உயர் அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.