ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோப் எதிர்வரும் 13 ஆம், 14 ஆம் திகதிகளில் சிறிலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது அவர், சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றி கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சீன வெளிவிவகார அமைச்சரும் சிறிலங்கா வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.