ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவின் ஏற்பாட்டில் இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்டுள்ளவர்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளனர் என ஆங்கிலவாரஇதழ் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் இலங்கை சுற்றுலாப்பயண அதிகார சபையின் செய்துகொண்ட இணக்கப்பாட்டினை உக்ரைனின் சுற்றுலாகுழுவினர் மீறியுள்ளனர் என ஆங்கிலவார இதழ் தெரிவித்துள்ளது. டிசம்பர் 28 ம் திகதி மத்தல விமானநிலையம் வந்த உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் கொரோனா வைரஸ் பரிசோதனைகளின் பின்னர் தங்கள் சுற்றுலாப்பயணத்தினை ஆரம்பித்துள்ளனர்.ஐந்து நாட்கள் கூட அவர்கள் தனிமைப்படு;த்தலில் இருக்கவில்லை உக்ரைன் கொரோனா வைரஸ் ஆபத்து அதிகம் ...
Read More »செய்திமுரசு
விக்டோரியாவில் மீண்டும் கொரோனா நோயாளர்கள்
இரண்டு மாத இடைவெளியின் பின்னர் அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூன்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என விக்டோரியா அரசாஙகம் தெரிவித்துள்ளது. மெல்பேர்னின் புறநகர் பகுதியை சேர்ந்;த ஒருவரும், ஹலாமிலிருந்து ஒருவரும் மிச்சாமிலிருந்து ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிதாக பாதிக்கப்பட்டவர்களை வீடுகளில் தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ள அதிகாரிகள் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். கொரோனா எவ்வாறு பரவியது என்பதனை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் இடம்பெறுகின்றன என அதிகாரிகள் தெரிவிததுள்ளார். 40 வயதுடைய இரு பெண்களும 70வயதுடைய பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளனர் ...
Read More »பாக்கிஸ்தானில் இந்து ஆலயம் மீதான தாக்குதல் தொடர்பில் பலர் கைது
இந்து ஆலயம் மீதானதாக்குதல் தொடர்பில் பாக்கிஸ்தானில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீ பரம்ஹான்ஸ் ஜி மகாராஜ் சமாதி என்ற இந்து ஆலயம் தாக்கி தீயிட்டு எரிக்கப்பட்டமை தொடர்பிலேயே பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாக்கிஸ்தானின் வடமேற்கு பிராந்தியமான கைர் பக்துன்வாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்து ஆலயம் தாக்கியழிக்கப்பட்டமைக்கு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. தாக்குதலை மேற்கொண்டவர்கள் மற்றும் தாக்குதலை தூண்டியவர்கள் என 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் மேலும் பலர் கைதுசெய்யப்படுவார்கள் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பல வருடங்களாக புனரமைக்கப்பட்டுக்கொண்டிருந்த ஆலயத்தினை விஸ்தரிப்பது உள்ளுர் ...
Read More »சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதி சிம்ம ராசியுடைய அமைச்சர்
இலங்கைக்கு அடுத்த முறை புதிய தலைமைத்துவம் ஒன்று கிடைக்கவுள்ளதாக இலங்கையின் பிரபல சோதிடர் சந்திரசிறி பண்டார தெரிவித்துள்ளார். அந்த நபர் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சராகச் செயற்படுவதாகவும் அவர் சிம்ம ராசி உடையவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் ராஜபக்ஷ குடும்பத்துக்கு வெளியேயுள்ள ஒருவராவார். அவரது பெயரை தற்போது வெளிப்படுத்த முடியாது. அவரது ஜாதகம் என்னிடம் உள்ளது எனத் தெரிவித்த அவர், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறவில்லை என்றால் என்னை நானே துப்பாக்கியில் சுட்டுக்கொல்வதாகக் கூறினேன். எனினும் அது சோதிடத்தில் ...
Read More »எவரும் ஆயுதமேந்துவதற்கு இடமளிக்கப்போவதில்லை- கமால் குணரட்ண
வெளிநாடுகளை தளமாக கொண்டு செயற்படு;ம் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் தலைவர்களை கைதுசெய்வதற்காக சிறிலங்கா வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார். போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கும்பல்களின் தலைவர்களை கைதுசெய்வதற்கான பேச்நுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன என அவர் குறிப்பிட்டுள்ளார். சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான 18 அறிவிப்புகள் இன்டர்போல் ஊடாக விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்படுவதிலிருந்து தப்பியுள்ள சில குற்றவாளிகள் தற்போது வெளிநாடுகளில் உள்ளனர் அவர்கள் இந்த வருடத்தில் கைதுசெய்யப்படுவார்கள் என கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.இவர்களுடைய நடவடிக்கைகள் உட்பட பல விடயங்கள் ...
Read More »யாதவ் வெளியே நடராஜன் உள்ளே
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள இரு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடது கை வேகப் பந்து வீச்சாளர் த. நடராஜன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் அடிலெய்டில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்து வீசுகையில் உமேஷ் யாதவ் உபாதைக்குள்ளானார். அந்த இன்னிங்ஸில் அவர் 3.3 ஓவர்கள் மாத்திரமே பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டார். இதன் காரணமாக அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டு, தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு யாதவ்வின் இடத்திற்கு ...
Read More »புத்தாண்டு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பங்கேற்பு இல்லை
போப் ஆண்டவர் பிரான்சிஸ் கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் நிலையில் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் நடைபெற்ற 2020-ம் ஆண்டு நிறைவு பிரார்த்தனையில் பங்கேற்கவில்லை. போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 84), கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர் நேற்று மாலை வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் நடைபெற்ற 2020-ம் ஆண்டு நிறைவு பிரார்த்தனையில் பங்கேற்கவில்லை. இதே போன்று புத்தாண்டு நள்ளிரவு பிரார்த்தனையிலும் அவரால் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. இந்த தகவலை அவரது செய்தி தொடர்பாளர் மேட்டியோ புரூனி தெரிவித்தார். ...
Read More »சிட்னியில் கொரோனா பரவல் – இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய பயணம் தள்ளி வைப்பு
சிட்னியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதையொட்டி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் போட்டித் தொடர் தள்ளி வைக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டியில் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது. முதல் போட்டி வருகிற 22-ந் தேதி கான்பெராவிலும், 2-வது போட்டி 25-ந் தேதி மெல்போர்னிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி 28-ந் தேதி ஹோபர்டிலும் நடக்க இருந்தது. இந்தநிலையில் சிட்னியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதையொட்டி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் ...
Read More »2020 இல் பெற்றதும் கற்றதும் – “புதிய வழமை” இப்படித்தான் தொடரப் போகின்றதா?
உலக நாடுகள் அனைத்தையும் போலவே ஈழத் தமிழர்களுக்கும் 2020 என்பது கொடூரமான ஒரு வருடமாகவே கடந்து சென்றிருக்கின்றது. 2020 மார்ச் நடுப்பகுதியில் இலங்கைக்குள் பிரவேசியத்த கொரோனா, தீவின் பொருளாதாரத்தை ஸ்தம்பிதமடையச் செய்துவிட்டது. நாட்டின் அசைவியக்கத்தையும் இது பெருமளவுக்குப் புரட்டிப்போட்டுவிட்டது. புதிய அரசியல் குழப்பங்களுக்கும் இது காரணமாகிவிட்டது. கொரோனாவின் மரண அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், பேரினவாதம்தான் இலங்கையை ஆட்சி செய்யப்போகின்றது என்பது 2020 இல் நாம் கற்றுக்கொண்ட பாடம். 2020 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், சிறுபான்மையினரை முற்றாக ஓரங்கட்டும் அவர்களுடைய செயற்பாடுகள் இலங்கையை ஒரு பௌத்த ...
Read More »காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் கவனயீர்ப்பு போராட்டம்
காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தாருங்கள் எனக் கோரி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய பின்பக்க வீதியில் அமைந்துள்ள நல்லை ஆதினம் முன்பாக நேற்று புதன்கிழமை காலை 9 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள், இனவாதத்தைக் கக்காதீர்கள், எங்கள் உறவுகளைக் கொல்லாதீர்கள், எங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வேண்டும், தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதியா?, மனிதாபிமானத்துடன் எமது பிள்ளைகளை விடுவியுங்கள், ...
Read More »