அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள இரு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடது கை வேகப் பந்து வீச்சாளர் த. நடராஜன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் அடிலெய்டில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்து வீசுகையில் உமேஷ் யாதவ் உபாதைக்குள்ளானார். அந்த இன்னிங்ஸில் அவர் 3.3 ஓவர்கள் மாத்திரமே பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டார்.
இதன் காரணமாக அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டு, தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு யாதவ்வின் இடத்திற்கு நடராஜனை பெயரிட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
இதுவரை சர்வதேச ரீதியில் ஒரு ஒருநாள் மற்றும் 3 இருபதுக்கு : 20 போட்டிகளில் விளையாடியுள்ள நடராஜன், டெஸ்ட் தொடரில் காலடி எடுத்து வைப்பது இது முதல் சந்தர்ப்பமாகும்.
Eelamurasu Australia Online News Portal