வெளிநாடுகளை தளமாக கொண்டு செயற்படு;ம் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் தலைவர்களை கைதுசெய்வதற்காக சிறிலங்கா வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கும்பல்களின் தலைவர்களை கைதுசெய்வதற்கான பேச்நுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான 18 அறிவிப்புகள் இன்டர்போல் ஊடாக விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்படுவதிலிருந்து தப்பியுள்ள சில குற்றவாளிகள் தற்போது வெளிநாடுகளில் உள்ளனர் அவர்கள் இந்த வருடத்தில் கைதுசெய்யப்படுவார்கள் என கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.இவர்களுடைய நடவடிக்கைகள் உட்பட பல விடயங்கள் குறித்து நாங்கள் வாராந்தம் ஆராய்ந்து வருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பிரிவினைவாதத்திற்கும் தீவிரவாதத்திறகும் இடமில்லை என குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆயுதங்களை ஏந்துவதற்கு எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் இம்முறை மனித உரிமை உரிமை மீறல்கள் குறித்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்படலாம் என்பது குறித்த கேள்விக்கு படையினர் எந்த வித யுத்தகுற்றங்களிலும் ஈடுபடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.