இரண்டு மாத இடைவெளியின் பின்னர் அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மூன்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என விக்டோரியா அரசாஙகம் தெரிவித்துள்ளது.
மெல்பேர்னின் புறநகர் பகுதியை சேர்ந்;த ஒருவரும், ஹலாமிலிருந்து ஒருவரும் மிச்சாமிலிருந்து ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களை வீடுகளில் தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ள அதிகாரிகள் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொரோனா எவ்வாறு பரவியது என்பதனை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் இடம்பெறுகின்றன என அதிகாரிகள் தெரிவிததுள்ளார்.
40 வயதுடைய இரு பெண்களும 70வயதுடைய பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
இவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன பலர்கண்டுபிடிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.