பிரபாகரன் இப்போது உயிருடன் இருந்திருந்தால் அரசாங்கம் அவரிடம் வடக்கு, கிழக்கு மாகாணங்களைக் கையளித்துவிட்டு அதற்குப் பதிலாக டொலர்களை வழங்குமாறு கோரியிருக்கும் என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான விஜித் விஜயமுனி சொய்சா சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறிய அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தற்போது கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகிய இரு அமெரிக்கர்களும் இணைந்துதான் நாட்டை நிர்வகிக்கின்றார்கள். மாறாக பிரதமரிடம் பெருமளவிற்கு அதிகாரங்கள் ...
Read More »செய்திமுரசு
மத்திய வங்கியின் கையிருப்பு அதிகரிப்பதற்கு எவ்வாறு பணம் வந்தது !
மத்திய வங்கியின் கையிருப்பு அதிகரிப்பதற்கு அரசாங்கத்துக்கு டொலர் எந்த அடிப்படையில் கிடைக்கப்பெற்றது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார். மத்திய வங்கியின் கையிருப்பு 3.1பில்லியன் டொலர்களாக உயர்வடைந்திருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார் அப்படியாயின் அந்த நிதி எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பதை பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றவகையில் எமக்கு தெரியப்படுத்த அவர்கள் கடமைப்பட்டிருக்கின்றார்கள் ஆனால் இந்த பணம் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்ற விடயத்தை மறைப்பதற்கு முயற்சிக்கின்றனர். எதற்காக மறைக்கவேண்டும் என ...
Read More »கவிஞர் மு.முருகேஷுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது
தமிழகத்திற்கான யுவ புரஸ்கார் விருது பெறுபவரின் விவரங்கள் வேறு தேதியில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 2021-ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த கவிஞர் மு.முருகேஷுக்கு அவர் எழுதிய ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’என்ற சிறுவர் இலக்கியத்திற்காக பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிற மொழிகளுக்கான யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்திற்கான யுவ புரஸ்கார் விருது பெறுபவரின் விவரங்கள் வேறு தேதியில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
Read More »ஆஸ்திரேலிய புலம்பெயர்வு திட்டத்தை ஆராயும் புலம்பெயர்வு நிலைக்குழு
பிப்ரவரி 2021: ஆஸ்திரேலியாவுக்கு பொருளாதார மட்டத்தில் முக்கிய பங்களிப்பைச் செலுத்தும் பட்டியலில் திறன்வாய்ந்த குடியேறிகள் முதன்மையானவர்களாக இருக்கின்றனர். கொரோனா பெருந்தொற்று சூழலுக்கு முன்னதாக, ஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் குடியேறிகள் திறன்வாய்ந்த புலம்பெயர்வு திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவுக்குள் சென்றிருக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் உழைப்புச்சக்தியில் ஏற்படும் இடைவெளியை நிரப்பும் இடத்தில் குடியேறிகல் இருக்கின்றனர். இந்த சூழலில், திறன்வாய்ந்த புலம்பெயர்வு திட்டம் தொடர்பான ஆராய்வை புலம்பெயர்வுக்கான கூட்டு நிலைக்குழு மேற்கொண்டுள்ளது. “திறன்வாய்ந்தவர்கள் புலம்பெயர்வது ஆஸ்திரேலியாவின் தற்போதைய தேவைகளையும் வருங்கால தேவைகளையும் எவ்வாறு பூர்த்தி செய்கிறது என்பதை கருத்தில் கொள்ள ...
Read More »ஓய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா!
எதிர்வரும் பெப்ரவரி வந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவிற்கு 89 வயது கழிந்து, தனது 90வது ஆண்டில் அவர் அடியெடுத்து வைக்க இருக்கிறார். பிரித்தானிய முடியின் கீழான கொலனியாக இலங்கை இருந்தபோது பிறந்தவர் இராஜவரோதயம் சம்பந்தன். டொனமூர் அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளில் பிறந்தவர். இலங்கை 1948ல் சுதந்திரம் பெறும் போது அவருக்கு 15 வயது கழிய ஒரு நாள் குறைவு. இலங்கைச் சட்டக் கல்லூரியில் கற்று சட்டத்தரணியாக பணிபுரிந்த அவர், 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில், தனது 44 ஆவது ...
Read More »அமெரிக்க நிறுவனத்தை சேர்ந்த செயற்கைகோள்கள் எங்கள் விண்வெளி நிலையத்தை மோத வந்தது
சீனா தனக்கென தனியாக விண்வெளி நிலையம் அமைத்து வருகிறது. இதற்காக சீன வீரர்கள் விண்வெளியில் தங்கி பணிகளை செய்து வருகிறார்கள். அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபர் எலான்மஸ்க் தனது நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ மூலம் ஏராளமாக செயற்கைகோள்களை விண்வெளியில் செலுத்தி உள்ளார். இணையதள சேவை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக செலுத்தப்பட்டுள்ள செயற்கை கோள்கள் புவிவட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. சீனா தனக்கென தனியாக விண்வெளி நிலையம் அமைத்து வருகிறது. இதற்காக சீன வீரர்கள் விண்வெளியில் தங்கி பணிகளை செய்து வருகிறார்கள். இந்தநிலையில் அமெரிக்க நிறுவனமான ...
Read More »’கூட்டு சமஷ்டியே நிரந்தர தீர்வு’
“தமிழ் மக்களுக்கான நிறைந்த இறுதித் தீர்வு, சர்வதேச சமூகத்தால் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் ஊடாகவே நடைபெற வேண்டும் என்பதே தமது நிலைப்பாடென, பாராளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் எம். பி. தெரிவித்தார். அத்துடன், தமிழ்க் கட்சிகள் காலம் காலமாக சமஷ்டியை ஒரு தீர்வாக வலியுறுத்தி வருகின்றன. கூட்டு சமஷ்டியே நிரந்தர தீர்வாக அமைய முடியும் என்பது எமது கூட்டணியின் நிலைப்பாடு எனவும், அவர் கூறினார். ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கும் முகமாக, நேற்று முன்தினம் (28), அவர் அனுப்பி வைத்த ...
Read More »பேராயர் டெஸ்மன்ட டுட்டு – அட்டூழியங்களுக்கு எதிரான உலகின் முகவரி
மனித உரிமைகளுக்காகவும் உலக சமாதானத்துக்காகவும் தனது தள்ளாத வயதிலும் போராடிவந்த பேராயர் டெஸ்மன்ட் டுட்டுவின் மறைவு ஈழத்தமிழர்களுக்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பு ஆகும். தென்னாபிரிக்காவில் தனது கறுப்பு இனத்தவர்களுக்கு எதிரான வெள்ளை நிறவெறிக்கு எதிராக ஜனநாயக வழியில் போராடிவந்த டெஸ்மன்ட் டுட்டு மனித உரிமைகளின் ஒரு சர்வதேச அடையாளமாக விளங்கிவந்துள்ளார். தென்னாபிரிக்காவைத் தாண்டியும் பூமிப்பந்தில் எங்கெல்லாம் மனிதம் வதைபடுகின்றதோ அங்கெல்லாங்கூட அட்டூழியங்களுக்கு எதிரான ஒரு உலகின் முகவரியாகத் திகழ்ந்தார் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தெரிவித்துள்ளது. பேராயர் டெஸ்மன்ட் டுட்டுவின் மறைவையொட்டி தமிழ்த்தேசியப் ...
Read More »டூட்டூ: சமநீதியின் உரத்த குரல்
தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக்கு எதிரான இயக்கத்தில் முன்னணியில் நின்றவரும் சமாதானத்துக்காக நோபல் பரிசு வென்றவருமான பேராயர் டெஸ்மண்ட் டூட்டூவின் மரணச் செய்தியை அடுத்து, பௌத்தத் துறவியும் அமைதிப் போராளியுமான தலாய் லாமா பேசிய வீடியோ ஒன்று பார்க்கக் கிடைத்தது. “எனது மரணவேளையில் உன்னை நான் நினைவில் வைத்திருப்பேன்” என்று தனது உயிர் நண்பரான டெஸ்மண்ட் டூட்டூவிடம் சொல்லும் வாக்கியம்தான். வேறு வேறு பண்பாடுகள், வேறு வேறு பின்னணிகளைக் கொண்ட இரு ஆளுமைகளிடையே இருந்த நிறைவான நட்பை மட்டும் இந்த வாக்கியம் தெரிவிக்கவில்லை. பிரிவினையில் போரிட்டு ...
Read More »யாழ். பல்கலை. முன்னாள் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் 2019 மே 03ஆம் திகதி இராணுவத்தினர் நடத்திய தேடுதலின் போது, கைது செய்யப்பட்ட முன்னாள் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளான மாணவர்கள் இருவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் உள்ள சான்றுப்பொருள்களை பாரப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு மே 3ஆம் திகதி இராணுவத்தினர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திலும், விடுதிகளிலும் பெருமெடுப்பில் சோதனைகளை முன்னெடுத்தனர். நூற்றுக்கணக்கான படையினர் இந்த தேடுதலில் ஈடுபட்டனர். இந்த தேடுதலின் போது, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal