சீனா தனக்கென தனியாக விண்வெளி நிலையம் அமைத்து வருகிறது. இதற்காக சீன வீரர்கள் விண்வெளியில் தங்கி பணிகளை செய்து வருகிறார்கள்.
அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபர் எலான்மஸ்க் தனது நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ மூலம் ஏராளமாக செயற்கைகோள்களை விண்வெளியில் செலுத்தி உள்ளார்.
இணையதள சேவை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக செலுத்தப்பட்டுள்ள செயற்கை கோள்கள் புவிவட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.
சீனா தனக்கென தனியாக விண்வெளி நிலையம் அமைத்து வருகிறது. இதற்காக சீன வீரர்கள் விண்வெளியில் தங்கி பணிகளை செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் அமெரிக்க நிறுவனமான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் செயற்கைகோள்கள் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதியும், அக்டோபர் மாதம் 21-ந் தேதியும் தங்கள் நாட்டு விண்வெளி நிலையத்தின் அருகே 2 முறை மோதுவது போல் வந்ததாக சீனா குற்றம் சுமத்தி உள்ளது.
இது தொடர்பாக சீன அரசு ஐ.நா. சபையிலும் புகார் செய்துள்ளது.
அமெரிக்க நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு சீனா கூறி உள்ளது.
 Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				