செய்திமுரசு

வங்கிக்குள் வாலிபர் தீக்குளிப்பு!

அவுஸ்ரேலியா நாட்டில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் நுழைந்த வாலிபர் ஒருவர் திடீரென தீக்குளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெல்போர்ன் நகருக்கு அருகில் உள்ள Springvale பகுதியில் Commonwealth Bank of Australia என்ற பன்னாட்டு தனியார் வங்கி இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று காலை 11.30 மணியளவில் வங்கிக்குள் வாலிபர் ஒருவர் நுழைந்துள்ளார். சில நிமிடங்களுக்கு பிறகு திடீரென வாலிபர் தன் மீது ஒருவித திரவத்தை ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார். வங்கியின் மையத்தில் வாலிபர் ஒருவர் தீக்குளித்து அலறுவதை கண்ட வாடிக்கையாளர்கள் அவரை ...

Read More »

சிறீலங்காவில் இடம்பெற்ற போர் உள்ளிட்ட ஐந்து முக்கிய விவகாரங்களில் இந்தியா

சிறீலங்காவில் இடம்பெற்ற போர் உள்ளிட்ட ஐந்து முக்கிய விவகாரங்களில் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை முடிவுகள் தொடர்பான உள்ளகத் தகவல்களை உள்ளடக்கிய நூல் ஒன்றை, இந்தியாவின் முன்னாள் சிவசங்கர் மேனன் எழுதி வெளியிட்டுள்ளார். இந்தியாவின் வெளிவிவகாரச் செயலராக 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை பதவி வகித்த சிவ்சங்கர் மேனன், அந்தப் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், 2010 ஜனவரி தொடக்கம் 2014 மே மாதம் வரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றியிருந்தார். இவர் இந்திய வெளிவிவகாரக் கொள்கை தொடர்பான முடிவுகளை எடுக்கும் செயல்முறைகள் ...

Read More »

உயிர் இழந்த 14 வது சிறுமியின் கடைசி ஆசை நிறைவேற்றிய நீதி மன்றம்

அரிய வகை புற்றுநோய் நோயால் பாதிக்கப்பட்ட லண்டனை சேர்ந்த்  14 வயது சிறுமி ஒருவர் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் நான் இறந்த பின்னரும் எனது உடலை  குளிரூட்டப்பட்ட நிலையில் பாதுகாக்கப்பட்டால் என்றாவது ஒருநாள் நான் நிச்சயம் உயிர் பிழைத்து எழுவேன் தனது உடலை, தன் தாய் பாதுகாக்க அனுமதியளிக்க வேண்டும் என்றும், தன் தந்தை இதனை செய்யக் கூடாது என்றும்   தனது இறுதி விருப்பமாக தெரிவித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, சிறுமியின் தாயார் அவரது ...

Read More »

அவுஸ்ரேலிய விசாவில் புதிய கட்டுப்பாடு

அவுஸ்ரேலியாவில் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஒரு வேலை ஒப்பந்தத்தை நிறைவேற்றிவிட்டு இன்னொரு வேலை தேடிக்கொள்வதற்காக தங்கிக்கொள்ள வழங்கி வந்த 90 நாள் அவகாசத்தை 60 நாட்களாக குறைத்து புதிய கட்டுப்பாட்டினை விதித்துள்ளது. அவுஸ்ரேலியாவில் திறமை வாய்ந்த வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ‘457 விசா’ என்ற 4 ஆண்டு கால விசா திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த விசாவின்படி, வெளிநாட்டு தொழிலாளர்கள் அந்த நாட்டில் பார்த்துவந்த வேலை ஒப்பந்தம் முடிந்து விட்டது என்றால், அங்கு 90 நாட்கள் தங்கி இருந்து மற்றொரு வேலைக்கு மாறி செல்ல அனுமதி அளிக்கப்பட்டு ...

Read More »

அவுஸ்ரே லியாவில் பணிபுரிகின்றவர்களுக்கு பொருத்தமான வங்கிக் கணக்கு ஏது?

அவுஸ்ரேலியாவில் பணிபுரிகின்ற அனைவருக்கும் வங்கிக்கணக்கு ஒன்று தேவை. ஆனால் எந்த வங்கியில் எப்படியான வங்கிக் கணக்கை ஆரம்பிக்க வேண்டுமென்பதில் இங்கு புதிதாக குடியேறிய பலருக்கும் குழப்பம் இருக்கலாம். சம்பியாவிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறிய ரொபேர்ட்டிற்கு அப்படித்தான் இருந்தது. இங்கு புழக்கத்திலிருக்கும் பலவிதமான பண கொடுப்பனவு முறைகள் இவரை ஆச்சரியத்திற்குள்ளாக்கியதாக சொல்கிறார். ஒவ்வொருவரும் தமக்கான வங்கிக் கணக்கை வைத்திருப்பது அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் உதவுகின்ற ஒன்று என்கிறார் Australian Bankers’ Associationஇன் நிறைவேற்று அதிகாரி Diane Tate. உலகில் வங்கிச் சேவையில் சிறந்து விளங்கும் நாடுகளில் அவுஸ்ரேலியாவும் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் அதிக சம்பளம் பெறக்கூடிய வேலைகள்

அவுஸ்ரேலியாவில் ஆண்டொன்றுக்கு 1லட்சம் டொலர்களுக்கு மேல் சம்பளம் பெறவேண்டுமென்றால் பங்குச் சந்தைத்துறையிலோ அல்லது மருத்துவத்துறை நிபுணராகவோ இருக்க வேண்டுமென்பதில்லை. பலரும் அதிகம் சிந்தித்துப் பார்த்திராத ஆனால் 1 லட்சம் டொலர்களுக்கு மேல் சம்பளம் பெறக்கூடிய துறைகள் இவை என PayScale வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. Reservoir engineer- Median annual salary: $143,000 Software architect-Median annual salary: $111,000 Airline Pilot-Median annual salary: $100,000 Dentist- Median annual salary: $100,968 Special agent-Median annual salary: $125,000 Geophysicist-Median annual ...

Read More »

முகப்புத்தகத்தால் அவுஸ்ரேலிய காவல் துறையிடம் சிக்கிய ஷேன் வார்ன்!

காரில் ‘சீட் பெல்ட்’ போடாமல் பயணம் செய்த ஷேன் வார்ன், கெவின் பீட்டர்சனை அவுஸ்ரேலிய காவல் துறையனர் விசாரிக்கவுள்ளனர். அவுஸ்ரேலியாவில் கடந்த நவம்பர் 14ல், ஹோபர்ட்டில் நடந்த தென் ஆப்ரிக்கா, அவுஸ்ரேலியா அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியை காண முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஷேன் வார்ன், கெவின் பீட்டர்சன், மைக்கேல் சிலாட்டர், மார்க் டெய்லர், இயான் ஹீலி ஆகியோர் காரில் பயணம் செய்துள்ளனர். காரை மார்க் டெய்லர் ஓட்டியுள்ளார். அவரும் இயான் ஹீலியும் சீட் பெல்ட் அணிந்துள்ளனர். ஆனால் பீட்டர்சன், வார்ன், சிலாட்டர் ஆகியோர் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் குடியமர்ந்த ஈழத்து இளைஞர் மரணம்

ஈழத்திலிருந்து  புகலிடம் கோரும் நோக்கில் ‘மெராக்’ கப்பலில் வந்து, பின் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுஅவுஸ்ரேலியாவில் குடியமர்ந்த அஜிதன் யுவராஜன்(24) என்ற இளைஞர் திடீர் மரணமடைந்தார். சிட்னியில் வசித்து வந்த இவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாகவும் இதுவே அவர் திடீர் மரணமடைவதற்குக் காரணம் எனவும் அவரது நண்பர் நிமல் SBS தமிழிடம் தெரிவித்தார். நேற்றையதினம் அஜிதனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகவும் அப்போது அவருடன் யாரும் இருந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அஜிதன் இயற்கை மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை நடத்துகின்றனர். இதேவேளை அஜிதனின் ...

Read More »

சர்வதேச நீதிமன்றம் கோரி ஐ.நா.மனித உரிமை ஆணையாளருக்கு மகஜர்!

சர்வதேச நீதிமன்றம் கோரி அரச சார்பற்ற நிறுவனங்கள் மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த சர்வதேச நீதவான்கள் அடங்கிய விசேட நீதிமன்றமொன்று நிறுவப்பட வேண்டுமென அரச சார்பற்ற நிறுவனங்கள் கோரியுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னிடம், இலங்கை அரச சார்பற்ற நிறுவனங்களின் 40 செயற்பாட்டாளர்கள் இரகசியமாக இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். இராணுவப் படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதவான்கள் அடங்கிய விசேட நீதிமன்றமொன்று ...

Read More »

அவுஸ்ரேலிய தேசிய மட்ட துடுப்பாட்டப் போட்டியில் தமிழீழ அணி வெற்றி!

அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற தேசிய மட்ட 20-20 துடுப்பாட்டப் போட்டியில், இலங்கையிலிருந்து புகலிடம் தேடிச்சென்ற தமிழ் இளைஞர்கள் அணி வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில், நேற்றிரவு நடைபெற்ற போட்டியில், ‘ஓசன்ஸ்12’ என்ற பெயரில் விளையாடிய ஈழத் தமிழ் இளைஞர்கள் அணி வெற்றியைப் பெற்றுள்ளது. ‘ஓசன்ஸ் 12’ சுதாகர் சேனாதிப்பிள்ளையின் தலைமையில் விளையாடியது. தேசிய மட்டத்திலான போட்டியில் வெற்றியைப் பெற்றதன் மூலம் ஈழத் தமிழர் அணி அவுஸ்திரேலியாவின் கவனத்தைப் பெற்றுள்ளது.

Read More »