அவுஸ்ரேலியா நாட்டில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் நுழைந்த வாலிபர் ஒருவர் திடீரென தீக்குளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெல்போர்ன் நகருக்கு அருகில் உள்ள Springvale பகுதியில் Commonwealth Bank of Australia என்ற பன்னாட்டு தனியார் வங்கி இயங்கி வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை 11.30 மணியளவில் வங்கிக்குள் வாலிபர் ஒருவர் நுழைந்துள்ளார்.
சில நிமிடங்களுக்கு பிறகு திடீரென வாலிபர் தன் மீது ஒருவித திரவத்தை ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார்.
வங்கியின் மையத்தில் வாலிபர் ஒருவர் தீக்குளித்து அலறுவதை கண்ட வாடிக்கையாளர்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர்.
இதில் 3 குழந்தைகள் உள்பட 27 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
உடனடியாக இச்சம்பவம் தொடர்பாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு வாலிபரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், வாலிபர் தற்போது அபாய கட்டத்தில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கியில் இருந்த வாடிக்கையாளர்களிடம் விசாரணை நடத்தியதில் வங்கி ஊழியர்களின் திருப்தி இல்லாத சேவையால் ஆத்திரம் அடைந்த வாலிபர் தீக்குளித்ததாக தெரியவந்துள்ளது.
வங்கியில் வாலிபர் தீக்குளித்துள்ள சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.