சர்வதேச நீதிமன்றம் கோரி அரச சார்பற்ற நிறுவனங்கள் மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த சர்வதேச நீதவான்கள் அடங்கிய விசேட நீதிமன்றமொன்று நிறுவப்பட வேண்டுமென அரச சார்பற்ற நிறுவனங்கள் கோரியுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னிடம், இலங்கை அரச சார்பற்ற நிறுவனங்களின் 40 செயற்பாட்டாளர்கள் இரகசியமாக இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இராணுவப் படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதவான்கள் அடங்கிய விசேட நீதிமன்றமொன்று நிறுவப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டுமென இந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal