அரிய வகை புற்றுநோய் நோயால் பாதிக்கப்பட்ட லண்டனை சேர்ந்த் 14 வயது சிறுமி ஒருவர் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில்
நான் இறந்த பின்னரும் எனது உடலை குளிரூட்டப்பட்ட நிலையில் பாதுகாக்கப்பட்டால் என்றாவது ஒருநாள் நான் நிச்சயம் உயிர் பிழைத்து எழுவேன் தனது உடலை, தன் தாய் பாதுகாக்க அனுமதியளிக்க வேண்டும் என்றும், தன் தந்தை இதனை செய்யக் கூடாது என்றும் தனது இறுதி விருப்பமாக தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, சிறுமியின் தாயார் அவரது உடலை பாதுகாப்பது குறித்து தீர்மானிக்க அனுமதிக்கப்படுவர் என்று தீர்ப்பளித்தார்.
அக்டோபர் மாதம் காலமான இந்த 14 வயது பெண்ணின் உடல், அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அவரது உடல் பதனிடப்பட்டது.
இந்த வழக்கின் தகவல்கள் தற்போது தான் வெளியாகியுள்ளது. தனது வாழ்க்கையின் கடைசி மாதங்களில், உயிரற்ற உடல்களை கடுங்குளிரில் பாதுகாக்கும் நடைமுறை மற்றும் தொழில் நுட்பம் குறித்த தகவல்களை இணையத்தளத்தில் இவர் தேடியுள்ளார்.